የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
93 : 6

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ قَالَ اُوْحِیَ اِلَیَّ وَلَمْ یُوْحَ اِلَیْهِ شَیْءٌ وَّمَنْ قَالَ سَاُنْزِلُ مِثْلَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ ؕ— وَلَوْ تَرٰۤی اِذِ الظّٰلِمُوْنَ فِیْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓىِٕكَةُ بَاسِطُوْۤا اَیْدِیْهِمْ ۚ— اَخْرِجُوْۤا اَنْفُسَكُمْ ؕ— اَلْیَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ غَیْرَ الْحَقِّ وَكُنْتُمْ عَنْ اٰیٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ ۟

6.93. ‘அல்லாஹ் மனிதன் மீது எந்த ஒன்றையும் இறக்கவில்லை’ அல்லது அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வஹி அறிவிக்காத நிலையில் அவன் எனக்கு வஹி அறிவித்துள்ளான் என்று கூறுவது அல்லது ‘அல்லாஹ் குர்ஆனை இறக்கியது போல நானும் இறக்குவேன்’ என்று கூறி அல்லாஹ்வின் மீது அபாண்டமாக பொய் கூறுபவர்களை விட மிகப் பெரிய அக்கிரமக்காரன் யாரும் இல்லை. தூதரே! நீர் இந்த அநியாயக்காரர்களை அவர்களுக்கு மரணம் நேரும் வேளையில் காணவேண்டுமே! வானவர்கள் தங்கள் கைகளால் அவர்களை அடித்தவர்களாக, வேதனைப்படுத்தியவர்களாகக் கூறுவார்கள், “உங்களின் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள். நாங்கள் அவற்றைக் கைப்பற்றிக் கொள்வோம். நபித்துவம், இறை அறிவிப்பு, அல்லாஹ் இறக்கியது போன்று இறக்குவேன் என்று வாதிட்டு அபாண்டமாக அல்லாஹ்வின் மீது பொய் கூறியதனாலும் அல்லாஹ்வின் சான்றுகளை நம்பாமல் கர்வம் கொண்டதனாலும் இன்றைய தினம் உங்களுக்கு இழிவுதரும் வேதனையை கூலியாக வழங்குவோம். அதனை நீர் இழிவான நிலைமையில் பார்ப்பீர். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• إنزال الكتب على الأنبياء هو سُنَّة الله في المرسلين، والنبي عليه الصلاة والسلام واحد منهم.
1. தூதர்களுக்கு வேதங்களை இறக்குவது தூதர்களாக அனுப்பப்பட்டோர் விடயத்தில் அல்லாஹ்வின் வழிமுறையாகும். நபியவர்களும் அவர்களில் ஒருவர்தாம். info

• أعظم الناس كذبًا وفرية هو الذي يكذب على الله تعالى، فينسب أو ينفي ويثبت في حق الله تعالى أمرًا ليس عليه دليل صحيح.
2. உரிய ஆதாரமின்றி அல்லாஹ்வைக் குறித்து ஒரு விடயம் இருப்பதாகவோ அல்லது இல்லையென்பதாகவோ, அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனே மனிதர்களில் மிகப் பெரும் பொய்யனும் அபாண்டம் சுமத்தியவனுமாவான். info

• كل أحد يبعث يوم القيامة فردًا متجردًا عن المناصب والألقاب، فقيرًا، ويحاسب وحده.
3. மறுமை நாளில் ஒவ்வொருவரும் தனித் தனியாக, பதவி, பட்டம் ஆகியவற்றை விட்டும் நீங்கியவராகவும் ஏழையாகவும் எழுப்பப்பட்டு தனியாகவே விசாரணை செய்யப்படுவார்கள். info