የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
153 : 6

وَاَنَّ هٰذَا صِرَاطِیْ مُسْتَقِیْمًا فَاتَّبِعُوْهُ ۚ— وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِیْلِهٖ ؕ— ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟

6.153. வழிகேட்டின் பாதைகளைப் பின்பற்றுவதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். மாறாக கோணலற்ற அல்லாஹ்வின் நேரான வழியையே நீங்கள் பின்பற்ற வேண்டும். வழிகேட்டின் பாதைகள் உங்களைப் பிரிவினையின் பக்கமும் சத்தியத்தை விட்டுத் தூரமாகவும் கொண்டு சென்றுவிடும். நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச வேண்டும் என்பதற்காக அவன் தன்னுடைய நேரான வழியைப் பின்பற்றும்படியே உங்களுக்கு அறிவுரை வழங்குகிறான். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• لا يجوز التصرف في مال اليتيم إلّا في حدود مصلحته، ولا يُسلَّم ماله إلّا بعد بلوغه الرُّشْد.
1. அநாதைகளுக்கு நன்மை தரும் விஷயங்களில் தவிர அவர்களின் செல்வங்களைப் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் பக்குவ வயதை அடைந்த பின்னரே அவர்களின் செல்வங்களை அவர்களின் வசம் ஒப்படைக்க வேண்டும். info

• سبل الضلال كثيرة، وسبيل الله وحده هو المؤدي إلى النجاة من العذاب.
2. வழிகேட்டின் வழிகள் பல. அல்லாஹ்வின் பாதை மாத்திரமே வேதனையிலிருந்து பாதுகாப்பதாகும். info

• اتباع هذا الكتاب علمًا وعملًا من أعظم أسباب نيل رحمة الله.
3. இவ்வேதத்தை அறிந்து செயற்படுத்திப் பின்பற்றுவது அல்லாஹ்வின் அருளைப் பெரும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். info