የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
6 : 49

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ بِنَبَاٍ فَتَبَیَّنُوْۤا اَنْ تُصِیْبُوْا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰی مَا فَعَلْتُمْ نٰدِمِیْنَ ۟

49.6. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்களே! பாவி ஒருவன் ஒரு சமூகத்தைக் குறித்து ஏதேனும் செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால் அந்த செய்தியின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து கொள்ளுங்கள். நீங்கள் -அந்தச் செய்தியை ஆராயாமல் நம்பினால்- உண்மை நிலவரம் தெரியாமல் ஒரு சமூகத்தின்மீது தீங்கிழைத்து விடுவீர்கள் என்ற அச்சமுண்டு என்பதால் அவசரப்பட்டு அதனை உண்மைப்படுத்திவிடாதீர்கள். இல்லையெனில் பின்னர் அவனது செய்தி பொய் என்று தெளிவானவுடன் நீங்கள் செய்த செயலுக்காக வருத்தப்படக்கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• وجوب التثبت من صحة الأخبار، خاصة التي ينقلها من يُتَّهم بالفسق.
1. செய்திகளில் குறிப்பாக தீயவன் என சந்தேகத்துக்குள்ளானவர் கொண்டுவரும் தகவல்களின் நம்பகத்தன்மையை ஆராய்வது கட்டாயமாகும். info

• وجوب الإصلاح بين من يتقاتل من المسلمين، ومشروعية قتال الطائفة التي تصر على الاعتداء وترفض الصلح.
2. முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமாதானம் செய்து வைப்பது கட்டாயமாகும். சமாதானத்தை மறுத்து வரம்புமீறலில் நிலைத்திருக்கும் கூட்டத்துடன் போர்புரிவது அனுமதிக்கப்பட்டதாகும். info

• من حقوق الأخوة الإيمانية: الصلح بين المتنازعين والبعد عما يجرح المشاعر من السخرية والعيب والتنابز بالألقاب.
3. ஈமானிய சகோதரத்துவத்தின் கடமைகள்: கருத்து வேறுபாடு கொண்ட இருவரிடையே சமாதானம் செய்துவைப்பது, பரிகாசம், குறைகூறல், தீய பட்டப்பெயர் சூட்டுதல் ஆகிய உணர்வுகளைக் காயப்படுத்தும் செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல். info