የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
34 : 31

اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ— وَیُنَزِّلُ الْغَیْثَ ۚ— وَیَعْلَمُ مَا فِی الْاَرْحَامِ ؕ— وَمَا تَدْرِیْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ؕ— وَمَا تَدْرِیْ نَفْسٌ بِاَیِّ اَرْضٍ تَمُوْتُ ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌ خَبِیْرٌ ۟۠

31.34. நிச்சயமாக மறுமை பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அது எப்போது நிகழும் என்பதை அவனே அறிவான். விரும்பிய சமயத்தில் அவன் மழை பொழிவிக்கிறான். கருவறையில் உள்ளதை அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா, பாக்கியசாலியா, அல்லது துர்பாக்கிசாலியா என்பதை அவனே நன்கறிவான். ஒருவர் நாளை என்ன சம்பாதிப்பார், நன்மையையா? அல்லது தீமையையா? என்பதை அல்லாஹ்வே அறிவான். எந்த ஆன்மாவும் தான் எந்த இடத்தில் மரணிக்கும் என்பதை அறியாது. மாறாக இவையனைத்தையும் அல்லாஹ்வே நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• نقص الليل والنهار وزيادتهما وتسخير الشمس والقمر: آيات دالة على قدرة الله سبحانه، ونعمٌ تستحق الشكر.
1. இரவு, பகல் நீளமாகவும் குறைவாகவும் வருவது, சூரியனும் சந்திரனும் வசப்படுத்தப்பட்டுள்ளது ஆகியவை அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் சான்றுகளாகும். நன்றி செலுத்துவதற்கு உரித்தான அருட்கொடைகளாகும். info

• الصبر والشكر وسيلتان للاعتبار بآيات الله.
2. பொறுமையும் நன்றியும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இருந்து படிப்பினை பெறுவதற்கான இரு வழிகளாகும். info

• الخوف من القيامة يقي من الاغترار بالدنيا، ومن الخضوع لوساوس الشياطين.
3.மறுமையை அஞ்சுவது உலகைக் கண்டு ஏமாறுதல், ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்குப் பணிதல் ஆகிவற்றை விட்டும் பாதுகாக்கும். info

• إحاطة علم الله بالغيب كله.
4. மறைவான ஒவ்வொன்றையும் அல்லாஹ்வின் அறிவு சூழ்ந்துள்ளது. info