የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
183 : 3

اَلَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَیْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰی یَاْتِیَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ ؕ— قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِیْ بِالْبَیِّنٰتِ وَبِالَّذِیْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

3.183. “அல்லாஹ் எங்கள் வேதங்களில் எங்களின் தூதர்களின்மூலம் எங்களிடம் ஒரு கட்டளையிட்டுள்ளான். அது எங்களிடம் வருகின்ற எந்த தூதரானாலும் அவர் அல்லாஹ்வுக்காக வழங்கும் தர்மத்தை வானத்திலிருந்து வரும் நெருப்பு பொசுக்காத வரை நாம் அவரை நம்பிக்கை கொள்ளக்கூடாது என்பதாகும்” என்று அவர்கள் அல்லாஹ்வின்மீது அபாண்டமாகவும் பொய்யாகவும் கூறுகிறார்கள். இக்கட்டளை அல்லாஹ் கூறியது, தூதர்களின் உண்மைக்கு ஆதாரம் நெருப்பு எரிக்கும் தர்மம் என்பவைகள் அனைத்துமே அல்லாஹ்வின் மீது அவர்கள் கூறிய பொய்களாகும். எனவேதான் அல்லாஹ் தன் தூதர் முஹம்மதிடம் பின்வருமாறு அவர்களிடம் கேட்குமாறு கட்டளையிடுகிறான்: “எனக்கு முன்னால் வந்த பல தூதர்கள் அவர்களின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான ஆதாரங்களையும் நீங்கள் கூறும், வானத்திலிருந்து நெருப்பு பொசுக்கக்கூடிய ஒரு பலிப்பிராணியையும் கொண்டு வந்தார்களே! நீங்கள் கூறும் விஷயத்தில் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை ஏன் பொய்ப்பித்தீர்கள்? ஏன் கொலை செய்தீர்கள்? info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• من سوء فعال اليهود وقبيح أخلاقهم اعتداؤهم على أنبياء الله بالتكذيب والقتل.
1. யூதர்கள் அல்லாஹ்வின் தூதர்களை மறுத்தும் கொலை செய்தும் வரம்புமீறியமை அவர்களது மோசமான செயற்பாடுகளிலும், கெட்டகுணங்களிலும் ஒன்றாகும். info

• كل فوز في الدنيا فهو ناقص، وإنما الفوز التام في الآخرة، بالنجاة من النار ودخول الجنة.
2. உலக வெற்றிகள் அனைத்துமே குறையுள்ளதே. பரிபூரண வெற்றி மறுமையில்தான். நரகிலிருந்து தப்பி சுவனத்தில் நுழைவதே அவ்வெற்றியாகும். info

• من أنواع الابتلاء الأذى الذي ينال المؤمنين في دينهم وأنفسهم من قِبَل أهل الكتاب والمشركين، والواجب حينئذ الصبر وتقوى الله تعالى.
3. வேதக்காரர்கள் இணைவைப்பாளர்கள் மூலம் முஃமின்களுக்கு அவர்களது மார்க்கத்திலும் அவர்களது சொந்தவிடயத்திலும் ஏற்படும் நோவினைகள் சோதனைகளில் ஒரு வகையே. இது போன்ற நிலமைகளில் பொறுமையைக் கடைபிடித்து அல்லாஹ்வை அஞ்சுவதே கடமையாகும். info