የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

የገፅ ቁጥር:close

external-link copy
40 : 26

لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ اِنْ كَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟

26.40. சூனியக்காரர்கள் மூஸாவை வென்றுவிட்டால் நாம் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றலாம். info
التفاسير:

external-link copy
41 : 26

فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَىِٕنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟

26.41. மூஸாவுடன் போட்டிபோட சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தபோது அவனிடம் கேட்டார்கள்: “நாங்கள் மூஸாவை வென்றுவிட்டால் எங்களுக்கு பொருளோ, பதவியோ கூலியாகக் கிடைக்குமா?” info
التفاسير:

external-link copy
42 : 26

قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ الْمُقَرَّبِیْنَ ۟

26.42. ஃபிர்அவ்ன் கூறினான்: “ஆம். உங்களுக்குக் கூலி உண்டு. நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறும் சமயத்தில் உயர்ந்த பதவிகளைப் பெற்று எனக்கு நெருக்கமானவர்களாக ஆகிவிடுவீர்கள்.” info
التفاسير:

external-link copy
43 : 26

قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟

26.43. மூஸா அல்லாஹ்வின் வெற்றியின் மீது உறுதியான நம்பிக்கைகொண்டவராக, நிச்சயமாக தன்னிடம் உள்ளது சூனியம் அல்ல என்பதை தெளிவுபடுத்தியவராக அவர்களிடம் கூறினார்: “நீங்கள் போடக்கூடிய கயிறுகளையும் கைத்தடிகளையும் போடுங்கள்.” info
التفاسير:

external-link copy
44 : 26

فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِیَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَنَحْنُ الْغٰلِبُوْنَ ۟

26.44. அவர்கள் கயிறுகளையும் கைத்தடிகளையும் போட்டார்கள். போடும்போது, “ஃபிர்அவ்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக, நாங்கள்தாம் வெற்றிபெறுவோம். மூஸா தோற்பவரே” எனக் கூறினார்கள். info
التفاسير:

external-link copy
45 : 26

فَاَلْقٰی مُوْسٰی عَصَاهُ فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚۖ

26.45. மூஸா தம் கைத்தடியைப் போட்டார். அது பாம்பாக மாறி அவர்கள் சூனியத்தினால் மக்களை மயக்குவதற்கு உருவாக்கியிருந்தவற்றை விழுங்கிவிட்டது. info
التفاسير:

external-link copy
46 : 26

فَاُلْقِیَ السَّحَرَةُ سٰجِدِیْنَ ۟ۙ

26.46. மூஸாவின் கைத்தடி அவர்கள் தமது சூனியத்தின் மூலம் உருவாக்கிய அனைத்தையும் விழுங்கியதைக் கண்ட சூனியக்காரர்கள் சிரம்பணிந்தவர்களாக விழுந்தார்கள். info
التفاسير:

external-link copy
47 : 26

قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ

26.47. அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனின் மீது நம்பிக்கைகொண்டோம். info
التفاسير:

external-link copy
48 : 26

رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟

26.48. அவன் தான் மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாவான்.” info
التفاسير:

external-link copy
49 : 26

قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ۚ— اِنَّهٗ لَكَبِیْرُكُمُ الَّذِیْ عَلَّمَكُمُ السِّحْرَ ۚ— فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ؕ۬— لَاُقَطِّعَنَّ اَیْدِیَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُوصَلِّبَنَّكُمْ اَجْمَعِیْنَ ۟ۚ

26.49. ஃபிர்அவ்ன் சூனியக்காரர்கள் நம்பிக்கை கொண்டதை மறுத்தவனாக கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் மூஸாவை ஏற்றுக் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர்தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த குரு. நீங்கள் அனைவரும் எகிப்தியர்களை வெளியேற்றுவதற்காக இரகசியமாகத் திட்டம் தீட்டியுள்ளீர்கள். உங்களுக்கு நான் அளிக்கும் தண்டனையை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். நான் உங்கள் ஒவ்வொருவரின் மாறுகை, மாறுகாலை (இடது கையுடன் வலது காலையும் அல்லது வலது கையுடன் இடது காலையும்) வெட்டிவிடுவேன். பேரீச்சந்தண்டுகளில் உங்கள் அனைவரையும் கட்டிவிடுவேன். உங்களில் யாரையும் விட்டுவைக்க மாட்டேன். info
التفاسير:

external-link copy
50 : 26

قَالُوْا لَا ضَیْرَ ؗ— اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۟ۚ

26.50. சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் கூறினார்கள்: “உலகிலே வெட்டித் தொங்கவிடுவேன் என்ற உம்முடைய மிரட்டலால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. உமது தண்டனை நீங்கிவிடும். நாங்கள் எங்கள் இறைவனின்பால் செல்லக்கூடியவர்கள். அவன் விரைவில் எங்களை நிலையான தன் அருளில் பிரவேசிக்கச் செய்திடுவான். info
التفاسير:

external-link copy
51 : 26

اِنَّا نَطْمَعُ اَنْ یَّغْفِرَ لَنَا رَبُّنَا خَطٰیٰنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ الْمُؤْمِنِیْنَ ۟ؕ۠

26.51. நிச்சயமாக நாங்கள் மூஸாவின் மீது முதலில் நம்பிக்கைகொண்டவர்கள் என்ற காரணத்தினால் நாங்கள் செய்த முந்தைய பாவங்களை அல்லாஹ் அழித்துவிடுவான் என்றே நாங்கள் ஆதரவு வைக்கிறோம். info
التفاسير:

external-link copy
52 : 26

وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَسْرِ بِعِبَادِیْۤ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟

26.52. இஸ்ராயீலின் மக்களை இரவோடு இரவாக அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டு நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம். ஏனெனில் நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனைச் சார்ந்தவர்களும் அவர்களைத் தடுக்க பின்தொடர்ந்து வருவார்கள். info
التفاسير:

external-link copy
53 : 26

فَاَرْسَلَ فِرْعَوْنُ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۚ

26.53. இஸ்ராயீலின் மக்கள் எகிப்தைவிட்டுச் செல்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் அவர்களை தடுக்க ஃபிர்அவ்ன் தன் படையினரில் சிலரை படையை திரட்டுமாறு நகரங்களில் அனுப்பிவைத்தான் . info
التفاسير:

external-link copy
54 : 26

اِنَّ هٰۤؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِیْلُوْنَ ۟ۙ

26.54. இஸ்ராயீலின் மக்களை குறைத்து மதிப்பிட்டவனாக ஃபிர்அவ்ன் கூறினான்: “நிச்சயமாக இவர்கள் சிறிய கூட்டம்தான். info
التفاسير:

external-link copy
55 : 26

وَاِنَّهُمْ لَنَا لَغَآىِٕظُوْنَ ۟ۙ

26.55. நிச்சயமாக அவர்கள் மீது நம்மைக் கோபம் கொள்ள வைத்து விட்டார்கள். info
التفاسير:

external-link copy
56 : 26

وَاِنَّا لَجَمِیْعٌ حٰذِرُوْنَ ۟ؕ

26.56. நிச்சயமாக நாங்கள் அவர்களுக்காக தயார்நிலையிலும் விழித்துக்கொண்டும் இருக்கின்றோம். info
التفاسير:

external-link copy
57 : 26

فَاَخْرَجْنٰهُمْ مِّنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ

26.57. எகிப்திலிருந்து ஃபிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் வெளியேற்றினோம். அந்த நாடு செழிப்பான தோட்டங்களையும் ஓடக்கூடிய நீருற்றுகளையும் கொண்டிருந்தது. info
التفاسير:

external-link copy
58 : 26

وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ

26.58. பண கருவூலங்களையும் அழகிய வசிப்பிடங்களையும் பெற்றிருந்தது. info
التفاسير:

external-link copy
59 : 26

كَذٰلِكَ ؕ— وَاَوْرَثْنٰهَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ

26.59. ஃபிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் இந்த அருள்களிலிருந்து வெளியேற்றியது போன்றே அவர்களுக்குப் பின் இந்த வகையான அருட்கொடைகளை இஸ்ராயீலின் மக்களுக்கு நாம் ஷாம் தேசத்தில் நாம் வழங்கினோம். info
التفاسير:

external-link copy
60 : 26

فَاَتْبَعُوْهُمْ مُّشْرِقِیْنَ ۟

26.60. ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் இஸ்ராயீலின் மக்களை சூரியன் உதிக்கும் சமயத்தில் பின்தொடர்ந்து சென்றார்கள். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• العلاقة بين أهل الباطل هي المصالح المادية.
1. உலகியல் ஆதாயங்களே அசத்தியவாதிகளுக்கு மத்தியில் உள்ள தொடர்பாகும். info

• ثقة موسى بالنصر على السحرة تصديقًا لوعد ربه.
2. தனது இறைவனின் வாக்குறுதியை நம்பியதனால் சூனியக்காரர்களுக்கு எதிராக தன் இறைவன் உதவிபுரிவான் என்ற மூஸாவின் நம்பிக்கை. info

• إيمان السحرة برهان على أن الله هو مُصَرِّف القلوب يصرفها كيف يشاء.
3. சூனியக்காரர்களின் ஈமான் நிச்சயமாக அல்லாஹ் உள்ளங்களை தான் நாடியவாறு புரட்டக்கூடியவன் என்பதற்கான ஆதாரமாகும். info

• الطغيان والظلم من أسباب زوال الملك.
4. அநியாயமும் வரம்பு மீறலும் ஆட்சி நீங்குவதற்கான காரணிகளில் ஒன்றாகும். info