የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
63 : 24

لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَیْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا ؕ— قَدْ یَعْلَمُ اللّٰهُ الَّذِیْنَ یَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا ۚ— فَلْیَحْذَرِ الَّذِیْنَ یُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِیْبَهُمْ فِتْنَةٌ اَوْ یُصِیْبَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

24.63. -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ்வின் தூதரைக் கண்ணியப்படுத்துங்கள். நீங்கள் அவரை அழைக்கும்போது உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப்போல முஹம்மதே அல்லது அப்துல்லாஹ்வின் மகனே, என்று பெயர்கூறி அழைக்காதீர்கள். மாறாக “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் நபியே!” என்று அழையுங்கள். அவர் ஏதேனும் பொதுக்காரியத்திற்காக உங்களை அழைத்தால் அவரின் அழைப்பை மற்றவர்களின் அழைப்பைப்போல் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள்.மாறாக உடனே அதற்குப் பதிலளியுங்கள். உங்களில் தூதரின் அனுமதியின்றி இரகசியமாகச் சென்றுவிடுவோரை அல்லாஹ் அறிவான். இறைத்தூதரின் கட்டளைக்கு மாறுசெய்பவர்கள், அல்லாஹ்விடமிருந்து தமக்கு ஏதேனும் சோதனை ஏற்படுவதை விட்டும் அல்லது அவர்களால் பொறுமை கொள்ள முடியாத வேதனைமிக்க தண்டனை ஏற்படுவதை விட்டும் எச்சரிக்கையாக இருக்கட்டும்.
info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• دين الإسلام دين النظام والآداب، وفي الالتزام بالآداب بركة وخير.
1. இஸ்லாமிய மார்க்கம் ஒழுக்கங்களையும் ஒழுங்கையும் போதிக்கும் மார்க்கமாகும். அந்த ஒழுங்குகளை கடைபிடிப்பதில் அபிவிருத்தியும் நலவும் உண்டு. info

• منزلة رسول الله صلى الله عليه وسلم تقتضي توقيره واحترامه أكثر من غيره.
2. மற்றவர்களைவிட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிக கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அந்தஸ்த்துக்குரியவராவார். info

• شؤم مخالفة سُنَّة النبي صلى الله عليه وسلم.
3. நபியவர்களின் வழிமுறைக்கு மாறாக செயல்படுவது துர்பாக்கியமாகும். info

• إحاطة ملك الله وعلمه بكل شيء.
4. அல்லாஹ்வின் ஆட்சியதிகாரமும் அறிவும் அனைத்தையும் சூழந்துள்ளன. info