የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
28 : 22

لِّیَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَیَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِیْۤ اَیَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ بَهِیْمَةِ الْاَنْعَامِ ۚ— فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآىِٕسَ الْفَقِیْرَ ۟ؗ

22.28. அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பு, நன்மையைப் பெறல், ஒற்றுமை இன்னும் பல அவர்களுக்குப் பயனளிப்பவற்றைப் பெறுவதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில் - துல்ஹஜ் பத்து மற்றும் அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் அதனை அடுத்து வரக்கூடிய மூன்று நாட்கள் - அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்பொருட்டு அவன் வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பலிப்பிராணிகளை அவன் பெயர்கூறி அறுத்து அவனை நினைவுகூர்வதற்காகவும் அங்கு வருவார்கள். அறுக்கப்பட்ட அந்த பிராணிகளிலிருந்து உண்ணுங்கள். கடும் வறிய ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• حرمة البيت الحرام تقتضي الاحتياط من المعاصي فيه أكثر من غيره.
1. புனித கஃபாவின் புனிதம், ஏனைய இடங்களை விட அந்த இடத்தில் பாவங்கள் செய்வதில் இருந்து அதிகம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை வேண்டி நிற்கின்றது. info

• بيت الله الحرام مهوى أفئدة المؤمنين في كل زمان ومكان.
2. எல்லா காலகட்டங்களிலும் இடங்களிலும் நம்பிக்கையாளர்களின் உள்ளங்கள் ஆசைகொள்ளும் இடம் அல்லாஹ்வின் புனித ஆலயமேயாகும். info

• منافع الحج عائدة إلى الناس سواء الدنيوية أو الأخروية.
3. ஹஜ்ஜுடைய இவ்வுலக, மறுவுலக பயன்கள் அனைத்தும் மனிதர்களுக்கே வந்து சேரக்கூடியது. info

• شكر النعم يقتضي العطف على الضعفاء.
4. அருள்களுக்கு நன்றிசெலுத்துவது என்பது பலவீனர்களுக்கு கருணை புரிவதை வேண்டுகின்றது. info