የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
79 : 21

فَفَهَّمْنٰهَا سُلَیْمٰنَ ۚ— وَكُلًّا اٰتَیْنَا حُكْمًا وَّعِلْمًا ؗ— وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَ ؕ— وَكُنَّا فٰعِلِیْنَ ۟

21.79. நாம் தாவூதை விட அவருடைய மகன் சுலைமானுக்கு அந்த வழக்கைப் புரிய வைத்தோம். நாம் இருவருக்கும் நபித்துவத்தையும் மார்க்க சட்டதிட்டங்களின் அறிவையும் வழங்கியிருந்தோம். நாம் சுலைமானுக்கு மட்டும் சிறப்பினை வழங்கவில்லை. தாவூதுக்கு மலைகளை வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் சேர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்தன. நாம் அவருக்குப் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம். நாமே அந்த விளக்கத்தையும், தீர்ப்பு வழங்குவதையும், அறிவையும், வசப்படுத்தலையும் வழங்குவோராயிருந்தோம். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• فعل الخير والصلاة والزكاة، مما اتفقت عليه الشرائع السماوية.
1. நலவு செய்தல், தொழுகை, ஸகாத் ஆகியவற்றில் வானலோக ஷரீஅத்துகள் (மார்க்கங்கள்) ஒன்றுபட்டுள்ளன. info

• ارتكاب الفواحش سبب في وقوع العذاب المُسْتَأْصِل.
2. மானக்கேடான காரியங்களில் ஈடுபடுவது பூண்டோடு அழித்துவிடும் வேதனை நிகழ்வதற்கான ஒரு காரணமாகும். info

• الصلاح سبب في الدخول في رحمة الله.
3. நேர்மை இறையருளில் நுழைவதற்குக் காரணமாக இருக்கின்றது. info

• الدعاء سبب في النجاة من الكروب.
4. பிரார்த்தனை துன்பங்களிலிருந்து தப்புவதற்கான ஒரு காரணமாகும். info