የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
48 : 2

وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا یُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟

2.48. நான் கட்டளையிட்டவற்றை செயல்படுத்தி, தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி மறுமைநாளில் உங்களுக்கும் தண்டனைக்கும் இடையே தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த நாளில் எவரும் மற்றவருக்கு எந்தப் பயனையும் அளித்துவிட முடியாது. எவரிடமிருந்து தீங்கை அகற்றுதல் அல்லது நன்மையைக் பெற்றுக்கொள்வதற்கான எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாது, ஆயினும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தவிர. ஒருவர் பூமி நிறைய தங்கத்தை ஈடாகக் கொண்டு வந்தாலும் அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படாது. அந்நாளில் அவர்களுக்கு எந்தவொரு உதவியாளரும் கிடையாது. பரிந்துரையாளரோ ஈட்டுத்தொகையோ உதவியாளரோ பயனளிக்காத போது எங்கே ஓடமுடியும்? info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• من أعظم الخذلان أن يأمر الإنسان غيره بالبر، وينسى نفسه.
1. மனிதன் தன்னை மறந்துவிட்டு மற்றவர்களை நன்மை செய்யத்தூண்டுவது பெரும் ஏமாற்றமாகும். info

• الصبر والصلاة من أعظم ما يعين العبد في شؤونه كلها.
2. பொறுமையும் தொழுகையும் அடியானின் அனைத்து விஷயங்களிலும் உதவிசெய்யக்கூடியவைகளில் மிகச் சிறந்தாகும். info

• في يوم القيامة لا يَدْفَعُ العذابَ عن المرء الشفعاءُ ولا الفداءُ، ولا ينفعه إلا عمله الصالح.
3. மறுமைநாளில் பரிந்துரை செய்பவர்களோ ஈட்டுத்தொகையோ அடியானை வேதனையிலிருந்து காப்பாற்றிவிடாது. நற்செயல்கள்தாம் அவனுக்குப் பயனளிக்கும். info