የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
276 : 2

یَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَیُرْبِی الصَّدَقٰتِ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِیْمٍ ۟

2.276. வட்டியின் மூலம் உருவான செல்வத்தை அல்லாஹ் அழிக்கிறான். அழித்தல் என்பது வெளிரங்கமான பொருட்சேதத்தைக் கொண்டோ மறைமுகமான பரக்கத்தை நீக்குவது கொண்டோ ஏற்படலாம். தர்மங்களுக்கு பலமடங்கு நன்மைகளை அளிக்கிறான். அவற்றை பத்துமடங்கிலிருந்து எழுநூறு மடங்குவரை அவன் அதிகரிக்கச் செய்கிறான். தர்மம் சய்வோரின் சொத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறான். அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடிய, அவன் தடைசெய்ததை அனுமதிக்கப்பட்டதாகக் கருதக்கூடிய, பாவங்களில் உழலக்கூடிய பிடிவாதக்காரனை அல்லாஹ் நேசிக்க மாட்டான். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• من أعظم الكبائر أكل الربا، ولهذا توعد الله تعالى آكله بالحرب وبالمحق في الدنيا والتخبط في الآخرة.
1. வட்டி வாங்கி உண்பது மிகப் பெரிய பாவமாகும். எனவேதான் அதனை உண்பவர்களை அல்லாஹ் போர், உலகில் இழப்பு, மறுமையில் தடுமாற்றம் போன்றவற்றைின் மூலம் எச்சரிக்கிறான். info

• الالتزام بأحكام الشرع في المعاملات المالية ينزل البركة والنماء فيها.
2. பொருளாதார விஷயங்களில் அல்லாஹ்வின் சட்டங்களை முறையாகக் கடைப்பிடிப்பதால் அவற்றில் பரக்கத்தும் வளர்ச்சியும் ஏற்படுகிறது. info

• فضل الصبر على المعسر، والتخفيف عنه بالتصدق عليه ببعض الدَّين أو كله.
3. கடனை அடைக்கமுடியாமல் சிரமப்படுபவர் விடயத்தில் பொறுமைமேற்கொள்வதும் கடனை முழுமையாகவோ ஒரு பகுதியையோ தள்ளுபடி செய்து தர்மம் செய்வதும் சிறப்புக்குரியவைகளாகும். info