የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
165 : 2

وَمِنَ النَّاسِ مَنْ یَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا یُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِ ؕ— وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕ— وَلَوْ یَرَی الَّذِیْنَ ظَلَمُوْۤا اِذْ یَرَوْنَ الْعَذَابَ ۙ— اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِیْعًا ۙ— وَّاَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعَذَابِ ۟

2.165. தெளிவான இந்த சான்றுகள் இருந்தும் மனிதர்களில் சிலர் அல்லாஹ்வுக்கு இணையான தெய்வங்களை ஏற்படுத்தி அல்லாஹ்வை நேசிப்பதுபோல் அந்த தெய்வங்களையும் நேசிக்கிறார்கள். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்கள் இவர்கள் தமது தெய்வங்களை நேசிப்பதை விட அல்லாஹ்வை அதிகமாக நேசிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவனுக்கு இணையாக யாரையும் ஆக்குவதில்லை. மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் அவனையே நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களோ மகிழ்ச்சியில் தாங்கள் ஏற்படுத்திக்கொண்ட தெய்வங்களை நேசிக்கிறார்கள்; துன்பத்தில் அல்லாஹ்வையே அழைக்கிறார்கள். இணைவைத்து, தீயகாரியங்கள் செய்து அநியாயக்காரர்களான இவர்கள் மறுமையில் வேதனையைக் காணும்போது வல்லமை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதையும் அறிந்துகொள்வார்கள். அவர்கள் இந்த வேதனையை முன்னரே பார்த்திருந்தால் ஒருபோதும் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியிருக்க மாட்டார்கள். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• المؤمنون بالله حقًّا هم أعظم الخلق محبة لله؛ لأنهم يطيعونه على كل حال في السراء والضراء، ولا يشركون معه أحدًا.
1. அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்களே அல்லாஹ்வை அதிகம் நேசிக்கும் மக்கள். ஏனெனில் அவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் அவனுக்கே கட்டுப்படுவார்கள். அவனுக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டார்கள். info

• في يوم القيامة تنقطع كل الروابط، ويَبْرَأُ كل خليل من خليله، ولا يبقى إلا ما كان خالصًا لله تعالى.
2. மறுமைநாளில் தொடர்புகள் அனைத்தும் அறுந்துவிடும். நெருங்கிய நண்பன் தன் நெருங்கிய நண்பனை விட்டும் விலகிவிடுவான். அல்லாஹ்வுக்காக செய்யப்பட்ட செயல்கள் மட்டுமே நிலைத்திருக்கும். info

• التحذير من كيد الشيطان لتنوع أساليبه وخفائها وقربها من مشتهيات النفس.
3. சைதானின் சூழ்ச்சிகள் பலதரப்பட்டவை, மறைவானவை, மனோஇச்சைகளுக்கு நெருக்கமானவை என்பதனால் அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். info