የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
117 : 2

بَدِیْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟

2.117. அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் அவற்றில் உள்ளவற்றையும் முன்மாதிரியின்றி ஆரம்பத்தில் படைத்தவன். அவன் ஏதேனும் ஒரு விஷயத்தை நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுகிறான். அது அவன் நாடியவாறு ஆகிவிடுகிறது. அவனுடைய கட்டளையைத் தடுப்பவர் யாருமில்லை. info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الكفر ملة واحدة وإن اختلفت أجناس أهله وأماكنهم، فهم يتشابهون في كفرهم وقولهم على الله بغير علم.
1. நிராகரிப்பு என்பது ஒரே மார்க்கம்தான், அதனைப் பின்பற்றுபவர்கள் வெவ்வேறானவர்களாக, வெவ்வேறு இடங்களிலுள்ளவர்களாக இருந்தாலும் சரியே. அவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதில், அவனைக்குறித்து ஆதாரமற்ற விஷயங்களைக் கூறுவதில் ஒத்தவர்களாகவே இருக்கின்றனர். info

• أعظم الناس جُرْمًا وأشدهم إثمًا من يصد عن سبيل الله، ويمنع من أراد فعل الخير.
2. அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுப்பவரும், நன்மை செய்யக்கூடியவர்களைத் தடுப்பவருமே பெரும் குற்றவாளிகள். info

• تنزّه الله تعالى عن الصاحبة والولد، فهو سبحانه لا يحتاج لخلقه.
3. மனைவியையோ மகனையோ ஏற்படுத்திக் கொள்வதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவன் தன் படைப்புகளிடத்தில் தேவையற்றவன். info