የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
23 : 18

وَلَا تَقُوْلَنَّ لِشَایْءٍ اِنِّیْ فَاعِلٌ ذٰلِكَ غَدًا ۟ۙ

18.23. நபியே! நீர் நாளை செய்ய விரும்பும் எதைக் குறித்தும், “நான் இதனை நாளை செய்து விடுவேன்” என்று கூறாதீர். ஏனெனில் நீர் அதைச் செய்வீரா? அல்லது உமக்கும் அந்த விஷயத்திற்கும் மத்தியில் ஏதேனும் குறுக்கிட்டு விடுமா? என்பதைக் குறித்து நீர் அறியமாட்டீர். இது ஒவ்வொரு முஸ்லிமுக்குமான வழிகாட்டலாகும். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• اتخاذ المساجد على القبور، والصلاة فيها، والبناء عليها؛ غير جائز في شرعنا.
1. அடக்கஸ்த்தலங்களில் பள்ளிவாயில்களை எழுப்புவது, அதில் நின்று தொழுவது, அதன் மீது கட்டடம் எழுப்புவது எமது மார்க்கத்தில் முழுக்க முழுக்க தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். info

• في القصة إقامة الحجة على قدرة الله على الحشر وبعث الأجساد من القبور والحساب.
2. குகைவாசிகளின் சம்பவத்தில், ஒன்று திரட்டப்படல், அடக்கஸ்த்தலங்களிலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படல், கேள்வி கணக்குக் கேட்டல் ஆகியவற்றின் மீது அல்லாஹ் ஆற்றலுள்ளவனே என்பதற்கான சான்று நிலைநாட்டப்பட்டுள்ளது. info

• دلَّت الآيات على أن المراء والجدال المحمود هو الجدال بالتي هي أحسن.
3. அழகிய முறையில் விவாதம் செய்வதே புகழப்படக்கூடிய விவாதமாகும் என்பதை மேலுள்ள வசனங்கள் குறிப்பிட்டுள்ளன. info

• السُّنَّة والأدب الشرعيان يقتضيان تعليق الأمور المستقبلية بمشيئة الله تعالى.
4. எதிர்கால விஷயங்களை இறைநாட்டத்தோடு இணைத்து விடுவதே இஸ்லாம் நமக்குக் கற்றுத்தரும் ஒழுக்கமும் வழிமுறையுமாகும். info