የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
57 : 16

وَیَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَنٰتِ سُبْحٰنَهٗ ۙ— وَلَهُمْ مَّا یَشْتَهُوْنَ ۟

16.57. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வுக்கு பெண் மக்கள் உண்டு என இணைத்துக் கூறினார்கள். அவர்கள்தாம் வானவர்கள் என்றும் நம்புகிறார்கள். அவர்கள் தமக்கு தாம் விரும்பும் ஆண்மக்களை தெரிவுசெய்துகொண்டு, தாம் விரும்பாததை அல்லாஹ்வுக்கு உண்டு எனக் கூறுகின்றார்கள். இதைவிட பெரும் அநியாயம் என்ன இருக்க முடியும்? அல்லாஹ்வுக்கு அவர்கள் ஏற்படுத்தும் இவ்வுறவை விட்டும் அவன் தூய்மையாகி விட்டான். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• من جهالات المشركين: نسبة البنات إلى الله تعالى، ونسبة البنين لأنفسهم، وأَنفَتُهم من البنات، وتغيّر وجوههم حزنًا وغمَّا بالبنت، واستخفاء الواحد منهم وتغيبه عن مواجهة القوم من شدّة الحزن وسوء الخزي والعار والحياء الذي يلحقه بسبب البنت.
1. இணைவைப்பாளர்களின் அறியாமை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் சில: (1.) அல்லாஹ்வுக்கு பெண் மக்களையும் தங்களுக்கு ஆண் மக்களையும் ஆக்கிக் கொண்டமை. (2.) பெண் பிள்ளைகளுடன் அவர்களின் வெறுப்பு பெண் பிள்ளைக் கிடைத்த நற்செய்தி கூறப்பட்டால் கவலையாலும் துக்கத்தினாலும் அவர்களின் முகங்கள் மாறிவிடும். 3. அவர்களுக்கு ஏற்படும் கடும் கவலை, அவமானம், இழிவு, பெண் குழந்தை கிடைத்ததனால் ஏற்படும் வெட்கம் ஆகிவற்றின் காரணத்தால் மக்களை எதிர்நோக்க முடியாமல் மறைந்து திரிதல். info

• من سنن الله إمهال الكفار وعدم معاجلتهم بالعقوبة ليترك الفرصة لهم للإيمان والتوبة.
2. அல்லாஹ் மக்களை உடனுக்குடன் தண்டிக்க மாட்டான். ஈமான் கொள்வதற்கும், பாவமன்னிப்புக் கோருவதற்கும் அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறான். இது அவனுடைய வழிமுறையாகும். info

• مهمة النبي صلى الله عليه وسلم الكبرى هي تبيان ما جاء في القرآن، وبيان ما اختلف فيه أهل الملل والأهواء من الدين والأحكام، فتقوم الحجة عليهم ببيانه.
3.அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளவற்றையும் பல்வேறுபட்ட மதத்தினரும், மனோ இச்சையின் பிரகாரம் நடந்துகொள்பவர்களும் கருத்து வேறுபாடு கொண்டுள்ள மார்க்கம், சட்டதிட்டங்கள் ஆகிவற்றைத் தெளிவுபடுத்துவதே நபியவர்களின் பெரும் பணியாகும். அதனை தெளிவுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கெதிரான ஆதாரம் நிரூபனமாகி விடும். info