የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
37 : 12

قَالَ لَا یَاْتِیْكُمَا طَعَامٌ تُرْزَقٰنِهٖۤ اِلَّا نَبَّاْتُكُمَا بِتَاْوِیْلِهٖ قَبْلَ اَنْ یَّاْتِیَكُمَا ؕ— ذٰلِكُمَا مِمَّا عَلَّمَنِیْ رَبِّیْ ؕ— اِنِّیْ تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟

12.37. யூஸுஃப் கூறினார்: “அரசரிடமிருந்தோ ஏனையோரிடமிருந்தோ உங்களுக்கு வழங்கப்படும் உணவு உங்களிடம் வருவதற்கு முன்னரே அதன் உண்மை நிலையையும் முறையையும் நான் உங்கள் இருவருக்கும் தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்த விளக்கம் எனக்கு என் இறைவன் கற்றுத் தந்தவையாகும். இது ஜோதிடமோ வானவியல் சாஸ்திரமோ அல்ல. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் மார்க்கத்தை நான் விட்டு விட்டேன். அவர்கள் மறுமையை ஏற்க மறுக்கிறார்கள். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• بيان جمال يوسف عليه السلام الذي كان سبب افتتان النساء به.
1. பெண்கள் பித்னாவுக்குள் விழுவதற்கு காரணமாக அமைந்த யூஸுஃப் நபியின் அழகு வர்ணிக்கப்பட்டுள்ளது. info

• إيثار يوسف عليه السلام السجن على معصية الله.
2. அல்லாஹ்வுக்கு மாறு செய்வதைவிட சிறை செல்வதையே யூஸுஃப் விரும்பினார். info

• من تدبير الله ليوسف عليه السلام ولطفه به تعليمه تأويل الرؤى وجعلها سببًا لخروجه من بلاء السجن.
3. கனவின் விளக்கத்தை அல்லாஹ் யூஸுஃபிற்கு (அலை) கற்றுக் கொடுத்து சிறைவாசச் சோதனையிலிருந்து வெளியேறுவதற்கான காரணமாக அதனை ஆக்கியது அல்லாஹ் அவருக்கு அளித்த அன்பிலும் அவனின் நிர்வாகத் தன்மையில் உள்ளவையாகும். info