የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
114 : 11

وَاَقِمِ الصَّلٰوةَ طَرَفَیِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ الَّیْلِ ؕ— اِنَّ الْحَسَنٰتِ یُذْهِبْنَ السَّیِّاٰتِ ؕ— ذٰلِكَ ذِكْرٰی لِلذّٰكِرِیْنَ ۟ۚ

11.114. -தூதரே!- பகலின் ஆரம்பம் முடிவு ஆகிய இரு ஓரங்களிலும் இரவு நேரங்களிலும் தொழுகையை சிறந்த முறையில் நிறைவேற்றுவீராக. நிச்சயமாக நற்செயல்கள் சிறிய பாவங்களைப் போக்கி விடுகின்றன. மேற்கூறப்பட்ட விஷயங்கள் அறிவுரை பெறக்கூடியவர்களுக்கு அறிவுரையாகவும் படிப்பினை பெறக்கூடியவர்களுக்கு படிப்பினையாகவும் இருக்கின்றது. info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• وجوب الاستقامة على دين الله تعالى.
1. இறைமார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருப்பது கடமையாகும். info

• التحذير من الركون إلى الكفار الظالمين بمداهنة أو مودة.
2. நிராகரிக்கும் அநியாயக்காரர்களின் பக்கம் அவர்களுக்கு விட்டுக் கொடுத்தோ அவர்களுடன் உறவாடியோ சாய்ந்து விடுவதை விட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. info

• بيان سُنَّة الله تعالى في أن الحسنة تمحو السيئة.
3. நன்மை தீமையை அழித்து விடும் என்ற அல்லாஹ்வின் வழிமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info

• الحث على إيجاد جماعة من أولي الفضل يأمرون بالمعروف، وينهون عن الفساد والشر، وأنهم عصمة من عذاب الله.
4. நன்மையை ஏவி தீமையை, குழப்பம் செய்வதை தடுக்கும் நல்ல மக்களைக் கொண்ட ஒரு கூட்டத்தை உருவாக்குமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர்களே அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் பாதுகாப்பு பெறுபவர்கள். info