የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
35 : 10

قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ ؕ— قُلِ اللّٰهُ یَهْدِیْ لِلْحَقِّ ؕ— اَفَمَنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ اَحَقُّ اَنْ یُّتَّبَعَ اَمَّنْ لَّا یَهِدِّیْۤ اِلَّاۤ اَنْ یُّهْدٰی ۚ— فَمَا لَكُمْ ۫— كَیْفَ تَحْكُمُوْنَ ۟

10.35. -தூதரே!- அவர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் உங்கள் இணைத்தெய்வங்களில் யாராவது உங்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுவார்களா? நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே சத்தியத்தின்பால் வழிகாட்டுகிறான். மனிதர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுபவன், அதன்பால் அவர்களை அழைப்பவன் பின்பற்றத்தகுதியானவனா? அல்லது மற்றவர்கள் வழிகாட்டா விட்டால் நேர்வழியடைய இயலாத உங்கள் தெய்வங்களா? உங்களுக்கு என்னவாயிற்று? அவை அல்லாஹ்வுக்கு இணையானவை என்பதாக எவ்வாறு தவறாக தீர்ப்பளிக்கிறீர்கள்? உங்களது கூற்றை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்து விட்டான். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الهادي إلى الحق هداية التوفيق هو الله وحده دون ما سواه.
1. சத்தியத்தைப் பின்பற்றும் பாக்கியம் அளிப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அவனைத் தவிர வேறு யாரும் இல்லை info

• الحث على تطلب الأدلة والبراهين والهدايات للوصول للعلم والحق وترك الوهم والظن.
2. (உறுதி மிக்க) அறிவு, சத்தியம் ஆகிவற்றை அடைவதற்கு ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் தேடுமாறும் யூகத்தையும் சந்தேகத்தையும் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. info

• ليس في مقدور أحد أن يأتي ولو بآية مثل القرآن الكريم إلى يوم القيامة.
3. மறுமை வரைக்கும் குர்ஆனைப் போன்ற ஒரு வசனத்தையேனும் யாராலும் கொண்டுவர முடியாது. info

• سفه المشركين وتكذيبهم بما لم يفهموه ويتدبروه.
4. இணைவைப்பாளர்களின் அறியாமையும் புரியாததையும் சிந்திக்காததையும் மறுத்து விடும் தன்மையும் குறிப்பிடப்பட்டுள்ளது. info