የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
108 : 10

قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۚ— فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ؕ— وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِوَكِیْلٍ ۟ؕ

10.108. -தூதரே!- நீர் கூறுவீராக: “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட குர்ஆன் உங்களிடம் வந்துள்ளது. யார் நேர்வழி பெற்று அதன் மீது நம்பிக்கை கொண்டாரோ அதன் பயன் அவருக்கே. ஏனெனில் அடியார்களின் கீழ்ப்படிதலை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். யாரேனும் வழிதவறினால் அதன் கேடு அவரை மட்டுமே சாரும். அடியார்களின் பாவங்களால் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை. நான் உங்களின் செயல்களைக் கணக்கிட்டு பாதுகாப்பவன் அல்ல.” info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• إن الخير والشر والنفع والضر بيد الله دون ما سواه.
1. நலவும், கெடுதியும், பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. வேறுயாராலும் முடியாது. info

• وجوب اتباع الكتاب والسُّنَّة والصبر على الأذى وانتظار الفرج من الله.
2. குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றுவதும் அதில் ஏற்படும் சிரமங்களைத் தாங்கிக் கொள்வதும் அல்லாஹ்விடம் விடுதலையை எதிர்பார்ப்பதும் கட்டாயமாகும். info

• آيات القرآن محكمة لا يوجد فيها خلل ولا باطل، وقد فُصِّلت الأحكام فيها تفصيلًا تامَّا.
3. குர்ஆனின் வசனங்கள் தீர்க்கமானவை. அதில் குறைகளோ அசத்தியமோ காணப்படாது. அதில் சட்டங்கள் மிகவும் விபரமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. info

• وجوب المسارعة إلى التوبة والندم على الذنوب لنيل المطلوب والنجاة من المرهوب.
4.எதிர்பார்ப்பதை அடைந்து அஞ்சுவதை விட்டும் தப்புவதற்காக தவ்பாவின் பக்கமும் பாவங்களை விட்டு வருந்துவதன் பக்கமும் விரைவது அவசியமாகும். info