የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚሊ ትርጉም - በዐብዱልሐሚድ ባቀዊይ

የገፅ ቁጥር:close

external-link copy
71 : 28

قُلْ اَرَءَیْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَیْكُمُ الَّیْلَ سَرْمَدًا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِضِیَآءٍ ؕ— اَفَلَا تَسْمَعُوْنَ ۟

71. (நபியே!) நீர் கேட்பீராக: ‘‘ இரவை மறுமை நாள் வரை உங்கள் மீது நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கிறானா?'' (இக்கேள்வியை) நீங்கள் செவியுற வேண்டாமா? info
التفاسير:

external-link copy
72 : 28

قُلْ اَرَءَیْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَیْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِلَیْلٍ تَسْكُنُوْنَ فِیْهِ ؕ— اَفَلَا تُبْصِرُوْنَ ۟

72. (மேலும் நபியே!) நீர் கேட்பீராக: ‘‘ பகலை இறுதி நாள் வரை உங்களுக்கு நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்து விட்டால், நீங்கள் இளைப்பாறக்கூடிய இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கிறானா?'' (இதை) நீங்கள் (படிப்பினை பெறும் கண்கொண்டு) பார்க்க வேண்டாமா? info
التفاسير:

external-link copy
73 : 28

وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَكُمُ الَّیْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِیْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

73. (அவ்வாறின்றி) நீங்கள் இளைப்பாறுவதற்கு இரவையும் (பல இடங்களுக்குச் சென்று வாழ்க்கைக்குத் தேவையான) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்ளும் பொருட்டு பகலையும் உங்களுக்கு அவன் ஏற்படுத்தி இருப்பதற்கு அவனுடைய அருள்தான் காரணம். இதற்கு நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக! info
التفاسير:

external-link copy
74 : 28

وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟

74. (நபியே!) அல்லாஹ் அவர்களை (விசாரணைக்காக) அழைத்து, ‘‘ எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?'' என்று கேட்கும் நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. info
التفاسير:

external-link copy
75 : 28

وَنَزَعْنَا مِنْ كُلِّ اُمَّةٍ شَهِیْدًا فَقُلْنَا هَاتُوْا بُرْهَانَكُمْ فَعَلِمُوْۤا اَنَّ الْحَقَّ لِلّٰهِ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠

75. ஒவ்வொரு வகுப்பாரிலிருந்தும் (நம் தூதர்களை) அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக அழைத்துக் கொண்டு (அவர்களை நோக்கி ‘‘ என்னையன்றி பிற படைப்புகளை தெய்வங்களென நீங்கள் கூறிக் கொண்டிருந்தீர்களே) அதற்குரிய உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்'' என்று நாம் கூறும் சமயத்தில், அவர்கள் பொய்யாகக் கூறிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் மறைந்து, உண்மை(யான இறைத் தன்மை) அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதென்பதை அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள். info
التفاسير:

external-link copy
76 : 28

اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰی فَبَغٰی عَلَیْهِمْ ۪— وَاٰتَیْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِی الْقُوَّةِ ۗ— اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْفَرِحِیْنَ ۟

76. காரூன் (என்பவன்) மூஸாவுடைய சமுதாயத்தில் உள்ளவனாக இருந்தான். எனினும், அவர்கள் மீது அவன் அநியாயங்கள் செய்யத் தலைப்பட்டான். ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம். அவற்றின் சாவிகளை மாத்திரம் பலசாலிகளான எத்தனையோ பேர்கள் மிக்க சிரமத்தோடு சுமக்க வேண்டியிருந்தது. (இத்தகைய நிலையில் அவனை நோக்கி) அவனுடைய மக்கள் ‘‘ நீ (கர்வத்துடன்) மகிழ்ச்சி அடையாதே! (கர்வம் கொண்டு) மகிழ்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை'' என்றும், info
التفاسير:

external-link copy
77 : 28

وَابْتَغِ فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِیْبَكَ مِنَ الدُّنْیَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَیْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِی الْاَرْضِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ ۟

77. ‘‘ (உன்னிடம் இருக்கும் பொருள்களை எல்லாம் அல்லாஹ்வே உனக்குக் கொடுத்தான். ஆகவே) அல்லாஹ் உனக்கு கொடுத்திருப்பதில் (தானம் செய்து) மறுமை வீட்டைத் தேடிக்கொள். இம்மையில் (தானம் செய்து நீ தேடிக் கொண்டதுதான்) உன் பாகம் என்பதை நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு(க் கொடுத்து) உதவி செய்தவாறு அதை(க் கொண்டு பிறருக்கு) நீயும் (தானம் செய்து) உதவி செய். பூமியில் நீ விஷமம் செய்ய விரும்பாதே! ஏனென்றால், விஷமிகளை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை'' என்றும் கூறினார்கள். info
التفاسير: