የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚሊ ትርጉም - በዐብዱልሐሚድ ባቀዊይ

external-link copy
14 : 13

لَهٗ دَعْوَةُ الْحَقِّ ؕ— وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَسْتَجِیْبُوْنَ لَهُمْ بِشَیْءٍ اِلَّا كَبَاسِطِ كَفَّیْهِ اِلَی الْمَآءِ لِیَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهٖ ؕ— وَمَا دُعَآءُ الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟

14. (நாம் பிரார்த்தனை செய்து) உண்மையாக அழைக்கத் தகுதி உடையவன் அவனே. எவர்கள் அவனையன்றி (மற்ற பொய்யான தெய்வங்களைப் பிரார்த்தனை செய்து) அழைக்கிறார்களோ அவர்களுக்கு, அவை எதையும் கொடுத்து விடாது. (அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றை அழைப்பவர்களின் உதாரணம்:) தண்ணீர் (தானாகவே) தன் வாயில் சென்றுவிட வேண்டுமென்று கருதி, தன் இரு கைகளையும் (நீட்டி அள்ளிக் குடிக்காமல்) விரித்துக் கொண்டே இருப்பவனைப் போல் இருக்கிறது. (அதை அவன் தன் கையால் அள்ளிக் குடிக்கும் வரை அவனுடைய) வாயை அது அடைந்துவிடாது. (பொய்யான தெய்வங்களிடம்) நிராகரிப்பவர்கள் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேடாகவே இருக்கிறது. info
التفاسير: