Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси

அல்முர்ஸலாத்

Суранинг мақсадларидан..:
الوعيد للمكذبين بالويل يوم القيامة.
பொய்ப்பிப்பவர்களுக்கு மறுமையில் கேடு உண்டு என எச்சரித்தல் info

external-link copy
1 : 77

وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۟ۙ

77.1. குதிரையின் பிடரி மயிரைப்போன்று தொடர்ந்து வரக்கூடிய காற்றுகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கிறான். info
التفاسير:

external-link copy
2 : 77

فَالْعٰصِفٰتِ عَصْفًا ۟ۙ

77.2. அவன் கடுமையான புயல் காற்றுகளைக்கொண்டு சத்தியம் செய்கிறான். info
التفاسير:

external-link copy
3 : 77

وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۟ۙ

77.3. மழையைப் பரப்பிவிடும் காற்றுகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கிறான். info
التفاسير:

external-link copy
4 : 77

فَالْفٰرِقٰتِ فَرْقًا ۟ۙ

77.4. சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டக்கூடியதைக் கொண்டு இறங்கும் வானவர்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்கிறான். info
التفاسير:

external-link copy
5 : 77

فَالْمُلْقِیٰتِ ذِكْرًا ۟ۙ

77.5. வஹியைக்கொண்டு இறங்கும் வானவர்களைக்கொண்டு அவன் சத்தியம் செய்கிறான். info
التفاسير:

external-link copy
6 : 77

عُذْرًا اَوْ نُذْرًا ۟ۙ

77.6. அல்லாஹ் மக்களுக்கு வழிகாட்டியதற்கு ஆதாரமாக அமைவதற்காகவும் மக்களை அவனுடைய வேதனையிலிருந்து எச்சரிப்பதற்காகவும் வானவர்கள் வஹியைக் கொண்டு இறங்குகிறார்கள். info
التفاسير:

external-link copy
7 : 77

اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ۟ؕ

77.7. நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்படுபவையான மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவது, விசாரணை செய்வது, கூலி வழங்குவது போன்றவை சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிறைவேறியே தீரும். info
التفاسير:

external-link copy
8 : 77

فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْ ۟ۙ

77.8. தம் ஒளியை நட்சத்திரங்கள் இழந்துவிடும்போது, info
التفاسير:

external-link copy
9 : 77

وَاِذَا السَّمَآءُ فُرِجَتْ ۟ۙ

77.9. வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது, info
التفاسير:

external-link copy
10 : 77

وَاِذَا الْجِبَالُ نُسِفَتْ ۟ۙ

77.10. மலைகள் அவற்றின் இடங்களிலிருந்து பெயர்க்கப்பட்டு தூசி போன்று தூள் தூளாக்கப்படும்போது, info
التفاسير:

external-link copy
11 : 77

وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْ ۟ؕ

77.11. தூதர்கள் குறிப்பிட்ட நேரத்திற்காக ஒன்றுதிரட்டப்படும்போது, info
التفاسير:

external-link copy
12 : 77

لِاَیِّ یَوْمٍ اُجِّلَتْ ۟ؕ

77.12. அந்த மகத்தான நாளுக்காக, தம் சமூகங்களுக்கு எதிராக சாட்சி கூறுவதற்காக அவர்கள் தாமதப்படுத்தப்பட்டார்கள். info
التفاسير:

external-link copy
13 : 77

لِیَوْمِ الْفَصْلِ ۟ۚ

77.13. அடியார்களிடையே தீர்ப்பு வழங்கப்படும் நாளுக்காக, அந்நாளில் அசத்தியவாதிகளில் சத்தியவாதிகள் யார்? துர்பாக்கியசாலிகளில் நற்பாக்கியசாலிகள் யார்? என்பது தெளிவாகிவிடும். info
التفاسير:

external-link copy
14 : 77

وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الْفَصْلِ ۟ؕ

77.77.14. -தூதரே!- தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? info
التفاسير:

external-link copy
15 : 77

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

77.15. அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் கொண்டு வந்ததை மறுத்தோருக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும். info
التفاسير:

external-link copy
16 : 77

اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِیْنَ ۟ؕ

77.16. நாம் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களை பொய்ப்பித்த முந்தைய சமூகங்களை அழிக்கவில்லையா? info
التفاسير:

external-link copy
17 : 77

ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِیْنَ ۟

77.17. பின்னர் பின்னால் வரும் மறுப்பாளர்களை அவர்களைப் பின்தொடரச் செய்தோம். நாம் முந்தையவர்களை அழித்ததைப்போன்றே அவர்களையும் அழிப்போம். info
التفاسير:

external-link copy
18 : 77

كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟

77.18. அந்த சமூகங்களை நாம் அழித்ததுபோன்றே முஹம்மது கொண்டுவந்த தூதை மறுக்கும் குற்றவாளிகளையும் அழிப்போம். info
التفاسير:

external-link copy
19 : 77

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

77.19. பாவிகளுக்கு தண்டனையிருப்பதாக அல்லாஹ்வின் எச்சரிக்கையை மறுப்போருக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும். info
التفاسير:
Ушбу саҳифадаги оят фойдаларидан:
• خطر التعلق بالدنيا ونسيان الآخرة.
1. உலகத்தின்மீது மோகம்கொண்டு மறுமையை மறப்பதன் விளைவு. info

• مشيئة العبد تابعة لمشيئة الله.
2. அடியானின் விருப்பம் அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டதாகும். info

• إهلاك الأمم المكذبة سُنَّة إلهية.
3. மறுக்கும் சமூகங்களை அழிப்பது இறைநியதியாகும். info