Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси

அல்கமர்

Суранинг мақсадларидан..:
التذكير بنعمة تيسير القرآن، وما فيه من الآيات والنذر.
அல்குர்ஆனை இலகுபடுத்தல் என்ற அருளையும், அதிலுள்ள அத்தாட்சிகள் எச்சரிக்கைகள் என்பவற்றையும் ஞாபகமூடுட்டல் info

external-link copy
1 : 54

اِقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ ۟

54.1. மறுமையின் வருகை நெருங்கிவிட்டது. (நபியவர்களின் காலத்தில்) சந்திரன் பிளந்துவிட்டது. அது பிளக்கப்பட்டது நபியவர்களுக்கு வழங்கப்பட்ட பார்த்து உணரக்கூடிய அற்புதமாக இருந்தது. info
التفاسير:

external-link copy
2 : 54

وَاِنْ یَّرَوْا اٰیَةً یُّعْرِضُوْا وَیَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ ۟

54.2. நபியவர்களின் வாய்மையை அறிவிக்கும் எந்த ஆதாரத்தை இணைவைப்பாளர்கள் கண்டாலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கவே செய்கிறார்கள். நாங்கள் கண்ட ஆதாரங்களும் சான்றுகளும் பொய்யான சூனியமாகும் என்றும் கூறுகிறார்கள். info
التفاسير:

external-link copy
3 : 54

وَكَذَّبُوْا وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ ۟

54.3. தங்களிடம் வந்துள்ள சத்தியத்தை அவர்கள் பொய்ப்பித்து விட்டார்கள். பொய்ப்பிப்பிலே தங்களின் மன இச்சைகளையே பின்பற்றினார்கள். அனைத்து விடயங்களும் அது நன்மையாக இருந்தாலும் அல்லது தீமையாக இருந்தாலும் மறுமை நாளில் அதற்கு உரியவர்களுக்கு கிடைத்தே தீரும். info
التفاسير:

external-link copy
4 : 54

وَلَقَدْ جَآءَهُمْ مِّنَ الْاَنْۢبَآءِ مَا فِیْهِ مُزْدَجَرٌ ۟ۙ

54.4. நிராகரிப்பினாலும் அக்கிரமத்தினாலும் நாம் அழித்த சமூகங்களைக் குறித்த செய்திகள் அவர்களிடம் வந்தேயுள்ளன. அவர்களின் நிராகரிப்பு மற்றும் அநியாயம் ஆகியவற்றிலிருந்து அவர்களைத் தடுப்பதற்கு அவை போதுமானதாக இருந்தன. info
التفاسير:

external-link copy
5 : 54

حِكْمَةٌ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُ ۟ۙ

54.5. அவர்களுக்கு எதிரான ஆதாரம் நிலைபெற வேண்டுமென்பதற்காக பூரண ஞானம் நிறைந்தவைகளே அவர்களிடம் வந்தன. அதனால்தான் ஆயினும் அல்லாஹ்வின்மீதும் மறுமை நாளின்மீதும் நம்பிக்கைகொள்ளாத மக்களுக்கு எச்சரிக்கைகள் பயனளிக்கமாட்டாது. info
التفاسير:

external-link copy
6 : 54

فَتَوَلَّ عَنْهُمْ ۘ— یَوْمَ یَدْعُ الدَّاعِ اِلٰی شَیْءٍ نُّكُرٍ ۟ۙ

54.6. -தூதரே!- அவர்கள் நேர்வழி பெறவில்லையென்றால் அவர்களை விட்டுவிடுவீராக. படைப்புகள் இதற்கு முன்னர் அறியாத கடுமையான விஷயத்தின்பால் சூர் ஊதுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள வானவர் அழைக்கும் நாளை எதிர்பார்த்தவாறு அவர்களைப் புறக்கணிப்பீராக. info
التفاسير:
Ушбу саҳифадаги оят фойдаларидан:
• عدم التأثر بالقرآن نذير شؤم.
1. குர்ஆனைக் கொண்டு தாக்கமடையாமல் இருப்பது துர்ச்சகுனத்திற்கான எச்சரிக்கையாகும். info

• خطر اتباع الهوى على النفس في الدنيا والآخرة.
2. இவ்வுலகிலும் மறுவுலகிலும் மன இச்சையைப் பின்பற்றுவதனால் ஆன்மாவுக்கு ஏற்படும் ஆபத்து. info

• عدم الاتعاظ بهلاك الأمم صفة من صفات الكفار.
3. முந்தைய சமூகங்கள் அழிக்கப்பட்டதைக் கொண்டு படிப்பினை பெறாமல் இருப்பது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும். info