Қуръони Карим маъноларининг таржимаси - Тамилча таржима. Таржимон: Абдулҳамид Боқовий.

Бет рақами:close

external-link copy
138 : 6

وَقَالُوْا هٰذِهٖۤ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ ۖۗ— لَّا یَطْعَمُهَاۤ اِلَّا مَنْ نَّشَآءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا یَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَیْهَا افْتِرَآءً عَلَیْهِ ؕ— سَیَجْزِیْهِمْ بِمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟

138. (மேலும், அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர், துறவி ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதைப் புசிக்கக்கூடாது'' என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத்தக்க கூலியை (தண்டனையை, இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான். info
التفاسير:

external-link copy
139 : 6

وَقَالُوْا مَا فِیْ بُطُوْنِ هٰذِهِ الْاَنْعَامِ خَالِصَةٌ لِّذُكُوْرِنَا وَمُحَرَّمٌ عَلٰۤی اَزْوَاجِنَا ۚ— وَاِنْ یَّكُنْ مَّیْتَةً فَهُمْ فِیْهِ شُرَكَآءُ ؕ— سَیَجْزِیْهِمْ وَصْفَهُمْ ؕ— اِنَّهٗ حَكِیْمٌ عَلِیْمٌ ۟

139. மேலும், அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்கள் ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்கள் பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு'' (அப்போது பெண்களும் புசிக்கலாம்) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவன், (அனைவரையும்) நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
140 : 6

قَدْ خَسِرَ الَّذِیْنَ قَتَلُوْۤا اَوْلَادَهُمْ سَفَهًا بِغَیْرِ عِلْمٍ وَّحَرَّمُوْا مَا رَزَقَهُمُ اللّٰهُ افْتِرَآءً عَلَی اللّٰهِ ؕ— قَدْ ضَلُّوْا وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟۠

140. எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது பொய் கூறித் தடுத்துக் கொண்டார்களோ அவர்களும் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை; நிச்சயமாக தீய வழியிலேயே சென்று விட்டனர். info
التفاسير:

external-link copy
141 : 6

وَهُوَ الَّذِیْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَیْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّیْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَیْرَ مُتَشَابِهٍ ؕ— كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ یَوْمَ حَصَادِهٖ ۖؗ— وَلَا تُسْرِفُوْا ؕ— اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ ۟ۙ

141. (பந்தலில்) படர்ந்த கொடிகளும், படராத செடிகளும், பேரீத்த மரங்கள் உள்ள சோலைகளையும், புசிக்கக்கூடிய விதவிதமான (பயிர்களையும்) தானியங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோன்றக்கூடிய ஒலிவம், மாதுளை (மற்றும் பலவகை கனிவர்க்கங்கள்) ஆகியவற்றையும் அவனே படைத்திருக்கிறான். ஆகவே, அவை காய்த்துப் பழுத்தால் அவற்றை (தாராளமாகப்) புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும்போது (இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அவனுடைய பாகத்தையும் (ஜகாத்தை) கொடுத்து விடுங்கள். அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. info
التفاسير:

external-link copy
142 : 6

وَمِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا ؕ— كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟ۙ

142. (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பெரிய) கால்நடைகளில், சுமை சுமக்கக்கூடிய வற்றையும், (சுமை சுமக்க முடியாத) சிறிய கால்நடைகளையும் (அவனே படைத்திருக்கிறான். ஆகவே,) அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் இவற்றில் (புசிக்கக் கூடியவற்றை) நீங்கள் புசியுங்கள். (இதில்) ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். info
التفاسير: