Қуръони Карим маъноларининг таржимаси - Тамилча таржима. Таржимон: Абдулҳамид Боқовий.

Бет рақами:close

external-link copy
49 : 34

قُلْ جَآءَ الْحَقُّ وَمَا یُبْدِئُ الْبَاطِلُ وَمَا یُعِیْدُ ۟

49. (மேலும்) கூறுவீராக: ‘‘உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக எதையும் (இதுவரை) செய்து விடவில்லை. இனியும் செய்யப் போவதில்லை.'' info
التفاسير:

external-link copy
50 : 34

قُلْ اِنْ ضَلَلْتُ فَاِنَّمَاۤ اَضِلُّ عَلٰی نَفْسِیْ ۚ— وَاِنِ اهْتَدَیْتُ فَبِمَا یُوْحِیْۤ اِلَیَّ رَبِّیْ ؕ— اِنَّهٗ سَمِیْعٌ قَرِیْبٌ ۟

50. (மேலும்) கூறுவீராக: ‘‘நான் வழிதவறி இருந்தால் அது எனக்கே நஷ்டமாகும். நான் நேரான வழியை அடைந்து இருந்தால் அது என் இறைவன் எனக்கு வஹ்யி மூலமாக அறிவித்ததன் காரணமாகவே ஆகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் (அனைத்திற்கும்) சமீபமானவனும் ஆவான். info
التفاسير:

external-link copy
51 : 34

وَلَوْ تَرٰۤی اِذْ فَزِعُوْا فَلَا فَوْتَ وَاُخِذُوْا مِنْ مَّكَانٍ قَرِیْبٍ ۟ۙ

51. ‘‘(மறுமையில்) இவர்கள் திடுக்கிட்டு(த் தப்பி) ஓட முயற்சித்த போதிலும் ஒருவருமே தப்பிவிட மாட்டார்கள். மிக்க சமீபத்திலேயே பிடிபட்டு விடுவார்கள்'' என்பதை நீர் காண்பீராயின் (அது எவ்வாறிருக்கும்)! info
التفاسير:

external-link copy
52 : 34

وَّقَالُوْۤا اٰمَنَّا بِهٖ ۚ— وَاَنّٰی لَهُمُ التَّنَاوُشُ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟ۚ

52. (அச்சமயம்) இவர்கள் (திடுக்கிட்டு) அதை (நம்பிக்கை கொண்டோம்) நம்பிக்கை கொண்டோம் என்று கதறுவார்கள். (சத்தியத்திலிருந்து) இவ்வளவு தூரம் சென்றுவிட்ட இவர்கள் (உண்மையான நம்பிக்கையை) எவ்வாறு அடைந்து விடுவார்கள்? info
التفاسير:

external-link copy
53 : 34

وَقَدْ كَفَرُوْا بِهٖ مِنْ قَبْلُ ۚ— وَیَقْذِفُوْنَ بِالْغَیْبِ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟

53. இதற்கு முன்னரோ, இவர்கள் அதை நிராகரித்துக் கொண்டும், இவ்வளவு தூரத்தில் அவர்களுக்கு மறைத்திருந்ததைப் (பொய் என்று) பிதற்றிக்கொண்டும் இருந்தனர். info
التفاسير:

external-link copy
54 : 34

وَحِیْلَ بَیْنَهُمْ وَبَیْنَ مَا یَشْتَهُوْنَ كَمَا فُعِلَ بِاَشْیَاعِهِمْ مِّنْ قَبْلُ ؕ— اِنَّهُمْ كَانُوْا فِیْ شَكٍّ مُّرِیْبٍ ۟۠

54. அவர்களுக்கும் அவர்கள் விரும்பியவற்றுக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்பட்டுவிடும். அவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்த இவர்களுடைய இனத்தாருக்குச் செய்யப்பட்டது. (ஏனென்றால்,) நிச்சயமாக அவர்களும் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்தே கிடந்தனர். info
التفاسير: