قرآن کریم کے معانی کا ترجمہ - تمل ترجمہ - عمر شریف

صفحہ نمبر: 244:235 close

external-link copy
79 : 12

قَالَ مَعَاذَ اللّٰهِ اَنْ نَّاْخُذَ اِلَّا مَنْ وَّجَدْنَا مَتَاعَنَا عِنْدَهٗۤ ۙ— اِنَّاۤ اِذًا لَّظٰلِمُوْنَ ۟۠

(யூஸுஃப்) கூறினார்: “எவரிடம் நம் பொருளை பெற்றுக் கொண்டோமோ அவரைத் தவிர (யாரையும்) நாம் பிடித்து வைப்பதை விட்டும் அல்லாஹ் (எங்களைப்) பாதுகாப்பானாக! அப்படி செய்தால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிடுவோம்.” info
التفاسير:

external-link copy
80 : 12

فَلَمَّا اسْتَیْـَٔسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِیًّا ؕ— قَالَ كَبِیْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْۤا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَیْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِیْ یُوْسُفَ ۚ— فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰی یَاْذَنَ لِیْۤ اَبِیْۤ اَوْ یَحْكُمَ اللّٰهُ لِیْ ۚ— وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟

ஆக, (தங்கள் கோரிக்கையை அவர் ஏற்கமாட்டார் என்று) அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்தபோது, அவர்கள் (தங்களுக்குள்) ஆலோசித்தவர்களாக (அவரை விட்டு) விலகி சென்றனர். அவர்களில் (வயதில்) பெரியவர் கூறினார்: “திட்டமாக உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் (பெயரால்) ஓர் உறுதிமொழியை வாங்கியதையும், இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் தவறிழைத்ததையும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கின்ற வரை; அல்லது, அல்லாஹ் எனக்கு தீர்ப்பளிக்கின்ற வரை இந்த பூமியை விட்டு நான் நகர மாட்டேன். தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிக மேலானவன்.” info
التفاسير:

external-link copy
81 : 12

اِرْجِعُوْۤا اِلٰۤی اَبِیْكُمْ فَقُوْلُوْا یٰۤاَبَانَاۤ اِنَّ ابْنَكَ سَرَقَ ۚ— وَمَا شَهِدْنَاۤ اِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَیْبِ حٰفِظِیْنَ ۟

நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று, (அவரிடம்) கூறுங்கள்: “எங்கள் தந்தையே! நிச்சயமாக உம் மகன் திருடிவிட்டார். இன்னும், நாங்கள் அறிந்தபடியே தவிர நாங்கள் (பொய்யாக) சாட்சி பகரவில்லை. மறைவானவற்றை அறிந்தவர்களாக நாங்கள் இருக்கவில்லை.” info
التفاسير:

external-link copy
82 : 12

وَسْـَٔلِ الْقَرْیَةَ الَّتِیْ كُنَّا فِیْهَا وَالْعِیْرَ الَّتِیْۤ اَقْبَلْنَا فِیْهَا ؕ— وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟

“நாங்கள் (தங்கி) இருந்த ஊரையும், நாங்கள் (சென்று) வந்த பயணக் கூட்டத்தையும் நீர் கேட்பீராக. இன்னும், நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களே!” info
التفاسير:

external-link copy
83 : 12

قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا ؕ— فَصَبْرٌ جَمِیْلٌ ؕ— عَسَی اللّٰهُ اَنْ یَّاْتِیَنِیْ بِهِمْ جَمِیْعًا ؕ— اِنَّهٗ هُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟

(யஅகூப்) கூறினார்: “மாறாக! உங்கள் ஆன்மாக்கள் ஒரு காரியத்தை அலங்கரித்தன. ஆகவே, அழகிய பொறுமை(யாக எனது பொறுமை இருக்கட்டும்). அல்லாஹ், அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வரக்கூடும். நிச்சயமாக அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.” info
التفاسير:

external-link copy
84 : 12

وَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰۤاَسَفٰی عَلٰی یُوْسُفَ وَابْیَضَّتْ عَیْنٰهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِیْمٌ ۟

இன்னும், அவர் அவர்களை விட்டு விலகிச் சென்று, “யூஸுஃபின் மீது எனக்குள்ள துயரமே!” என்று கூறினார். இன்னும், அவரது இரு கண்களும் கவலையால் (அழுதழுது) வெளுத்து விட்டன. அவர் (தன் கோபத்தையும் கவலையையும்) அடக்கிக் கொள்பவர். info
التفاسير:

external-link copy
85 : 12

قَالُوْا تَاللّٰهِ تَفْتَؤُا تَذْكُرُ یُوْسُفَ حَتّٰی تَكُوْنَ حَرَضًا اَوْ تَكُوْنَ مِنَ الْهٰلِكِیْنَ ۟

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அழிவை நெருங்கியவராக நீர் ஆகும் வரை; அல்லது, இறந்தவர்களில் நீர் ஆகும் வரை யூஸுஃபை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர் (போலும்)” என்று அவர்கள் கூறினார்கள். info
التفاسير:

external-link copy
86 : 12

قَالَ اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّیْ وَحُزْنِیْۤ اِلَی اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

(யஅகூப்) கூறினார்: “என் துக்கத்தையும் என் கவலையையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடம்தான். இன்னும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நான் அறிவேன்.” info
التفاسير: