قرآن کریم کے معانی کا ترجمہ - تمل ترجمہ - عمر شریف

صفحہ نمبر:close

external-link copy
7 : 10

اِنَّ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا وَرَضُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا وَاطْمَاَنُّوْا بِهَا وَالَّذِیْنَ هُمْ عَنْ اٰیٰتِنَا غٰفِلُوْنَ ۟ۙ

நிச்சயமாக எவர்கள் நம் சந்திப்பை பயப்படாமல் இருக்கிறார்களோ; இன்னும், இவ்வுலக வாழ்க்கையை விரும்புகிறார்களோ: இன்னும், அதைக் கொண்டு நிம்மதி அடைகிறார்களோ; இன்னும், நம் வசனங்களை எவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்களோ, info
التفاسير:

external-link copy
8 : 10

اُولٰٓىِٕكَ مَاْوٰىهُمُ النَّارُ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟

அ(த்தகைய)வர்கள், அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். info
التفاسير:

external-link copy
9 : 10

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ یَهْدِیْهِمْ رَبُّهُمْ بِاِیْمَانِهِمْ ۚ— تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தவர்கள், - அவர்களுடைய இறைவன் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக அவர்களை நேர்வழி செலுத்துவான். அவர்கள் இன்பமிகு சொர்க்கங்களில் இருப்பார்கள். அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடும். info
التفاسير:

external-link copy
10 : 10

دَعْوٰىهُمْ فِیْهَا سُبْحٰنَكَ اللّٰهُمَّ وَتَحِیَّتُهُمْ فِیْهَا سَلٰمٌ ۚ— وَاٰخِرُ دَعْوٰىهُمْ اَنِ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠

அதில் அவர்களின் பிரார்த்தனையாவது, “அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன்” என்பதாகும். அதில், அவர்களின் முகமன் “ஸலாம்” ஆகும். இன்னும், அவர்களுடைய பிரார்த்தனையின் இறுதியானது, “நிச்சயமாக புகழ் (அனைத்தும்) அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே சொந்தமானது” என்பதாகும். info
التفاسير:

external-link copy
11 : 10

وَلَوْ یُعَجِّلُ اللّٰهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَیْرِ لَقُضِیَ اِلَیْهِمْ اَجَلُهُمْ ؕ— فَنَذَرُ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟

நன்மையை (கேட்டு) அவர்கள் அவசரப்படுவது போல் அல்லாஹ்வும் மனிதர்களுக்கு (அவர்களின் பாவத்திற்குரிய)த் தீங்கை (-தண்டனையை) விரைவாகக் கொடுத்தால் அவர்களுக்கு அவர்களுடைய தவணைக் காலம் (முன்பே) முடிக்கப்பட்டிருக்கும். ஆகவே, நம் சந்திப்பை பயப்படாதவர்களை, - அவர்களுடைய வழிகேட்டிலேயே கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக – விட்டு விடுகிறோம். info
التفاسير:

external-link copy
12 : 10

وَاِذَا مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖۤ اَوْ قَاعِدًا اَوْ قَآىِٕمًا ۚ— فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ یَدْعُنَاۤ اِلٰی ضُرٍّ مَّسَّهٗ ؕ— كَذٰلِكَ زُیِّنَ لِلْمُسْرِفِیْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

இன்னும், மனிதனுக்கு துன்பம் ஏற்பட்டால், அவன் தன் விலாவின் மீது (சாய்ந்தவனாக); அல்லது, உட்கார்ந்தவனாக; அல்லது, நின்றவனாக (அதை நீக்கித் தரும்படி) நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனை விட்டு அவனுடைய துன்பத்தை நாம் நீக்கிவிடும்போது அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு நம்மை அழைக்காதது போன்று சென்று விடுகிறான். எல்லை மீறி(ய பாவி)களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை இவ்வாறு அலங்கரிக்கப்பட்டன. info
التفاسير:

external-link copy
13 : 10

وَلَقَدْ اَهْلَكْنَا الْقُرُوْنَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوْا ۙ— وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ وَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا ؕ— كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟

(மனிதர்களே!) உங்களுக்கு முன்னர் (வாழ்ந்த பல) தலைமுறைகளை அவர்கள் அநியாயம் செய்தபோது திட்டவட்டமாக நாம் அழித்தோம். இன்னும், அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தனர். எனினும், (அவற்றை) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை. குற்றம் புரிகின்ற மக்களை இவ்வாறே நாம் தண்டிப்போம். info
التفاسير:

external-link copy
14 : 10

ثُمَّ جَعَلْنٰكُمْ خَلٰٓىِٕفَ فِی الْاَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَیْفَ تَعْمَلُوْنَ ۟

பிறகு, நீங்கள் எப்படி(ப்பட்ட செயல்கள்) செய்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னர் நாம் உங்களை பூமியில் வாரிசுகளாக (முந்திய சமுதாயத்தின் வழித்தோன்றல்களாக) ஆக்கினோம். info
التفاسير: