قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ

external-link copy
44 : 8

وَاِذْ یُرِیْكُمُوْهُمْ اِذِ الْتَقَیْتُمْ فِیْۤ اَعْیُنِكُمْ قَلِیْلًا وَّیُقَلِّلُكُمْ فِیْۤ اَعْیُنِهِمْ لِیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠

8.44. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் இணைவைப்பாளர்களைச் சந்தித்த போது அல்லாஹ் அவர்களை உங்களுக்குக் குறைத்துக் காட்டியதை நினைவுகூருங்கள். அது அவர்களுடன் போர் புரிய உங்களைத் தூண்டியது. அதேபோன்று இணைவைப்பாளர்களும் பின்வாங்கிச் செல்லாமல் அவர்களும் உங்களுடன் போரிட முன்வருவதற்காக அவர்களின் கண்களுக்கும் உங்களைக் குறைத்துக் காட்டினான். கொலை, கைது ஆகியவற்றின் மூலம் இணைவைப்பாளர்களைப் பழிவாங்கி, எதிரிகளுக்கெதிராக வெற்றியை அளித்து நம்பிக்கையாளர்களுக்கு அருள் புரிந்து முடிவு செய்யப்பட்ட ஒரு காரியத்தை நடாத்துவதற்காகவே இவ்வாறு செய்தான். அல்லாஹ்வின் பக்கமே விவகாரங்கள் அனைத்தும் திரும்புகின்றன. அவன் தீயவர்கள் செய்த தீய செயல்களுக்காக தண்டனை வழங்குகிறான். நல்லவர்கள் செய்த நற்செயல்களுக்காக வெகுமதி வழங்குகிறான். info
التفاسير:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• الغنائم لله يجعلها حيث شاء بالكيفية التي يريد، فليس لأحد شأن في ذلك.
1. போர்ச் செல்வங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியவாறு அவன் அதனைப் பங்கிடுகிறான். இதில் வேறு எவருக்கும் உரிமை இல்லை. info

• من أسباب النصر تدبير الله للمؤمنين بما يعينهم على النصر، والصبر والثبات والإكثار من ذكر الله.
2. நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியை வழங்குபவற்றை அவர்களுக்காக அல்லாஹ் திட்டமிடுவதும், பொறுமை, உறுதி, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறல் ஆகியவை வெற்றிக்கான காரணிகளில் உள்ளவையாகும். info

• قضاء الله نافذ وحكمته بالغة وهي الخير لعباد الله وللأمة كلها.
3. அல்லாஹ்வின் தீர்ப்பே நடந்தேறும். அவனது ஞானம் ஆழமானது. அதுவே அவனது அடியார்களுக்கும் முழு சமூகத்துக்கும் நலவாகும். info