قرآن کریم کے معانی کا ترجمہ - تمل ترجمہ - عبد الحمید باقوی

صفحہ نمبر:close

external-link copy
78 : 5

لُعِنَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ؕ— ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟

78. இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தே பாவம் செய்து வந்தனர். info
التفاسير:

external-link copy
79 : 5

كَانُوْا لَا یَتَنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ؕ— لَبِئْسَ مَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟

79. அவர்கள் செய்து வந்த பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாதவர்களாக(வும், ஒருவர் மற்றவரை அதிலிருந்து தடுக்காதவர்களாகவும்) இருந்து வந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் மிகத் தீயவையே! info
التفاسير:

external-link copy
80 : 5

تَرٰی كَثِیْرًا مِّنْهُمْ یَتَوَلَّوْنَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ اَنْفُسُهُمْ اَنْ سَخِطَ اللّٰهُ عَلَیْهِمْ وَفِی الْعَذَابِ هُمْ خٰلِدُوْنَ ۟

80. அவர்களில் பெரும்பான்மையினர் நிராகரிப்பவர்களை தோழமை கொள்வதை (நபியே!) நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படி அவர்கள் தாமாகவே தேடிக் கொண்டது மிகக் கெட்டது. அவர்கள் (நரக) வேதனையில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். info
التفاسير:

external-link copy
81 : 5

وَلَوْ كَانُوْا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِیِّ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِیَآءَ وَلٰكِنَّ كَثِیْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟

81. அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் (நிராகரித்த) அவர்களைத் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் பாவிகள் ஆவர். info
التفاسير:

external-link copy
82 : 5

لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الْیَهُوْدَ وَالَّذِیْنَ اَشْرَكُوْا ۚ— وَلَتَجِدَنَّ اَقْرَبَهُمْ مَّوَدَّةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰی ؕ— ذٰلِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّیْسِیْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟

82. (நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீர் காண்பீர்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், நிச்சயமாக அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை. info
التفاسير:

external-link copy
83 : 5

وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَی الرَّسُوْلِ تَرٰۤی اَعْیُنَهُمْ تَفِیْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَقِّ ۚ— یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟

83. தவிர, (இவர்களில் பலர் நம்) தூதர் மீது அருளப்பட்டவற்றை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர் “எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர். info
التفاسير: