قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ

بەت نومۇرى:close

external-link copy
10 : 64

وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟۠

எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும், நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரக வாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும். info
التفاسير:

external-link copy
11 : 64

مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ یَهْدِ قَلْبَهٗ ؕ— وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

எந்த சோதனையும் (யாருக்கும்) ஏற்படாது, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வாரோ அவரின் உள்ளத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
12 : 64

وَاَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ ۚ— فَاِنْ تَوَلَّیْتُمْ فَاِنَّمَا عَلٰی رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟

அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள்! இன்னும், தூதருக்கு கீழ்ப்படியுங்கள்! ஆக, நீங்கள் புறக்கணித்து விலகினால் (நமது தூதருக்கு நஷ்டமில்லை. ஏனெனில்,) நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம் (உங்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை) தெளிவாக எடுத்துரைப்பதுதான். info
التفاسير:

external-link copy
13 : 64

اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟

அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (ஈமான் கொண்ட) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும். info
التفاسير:

external-link copy
14 : 64

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ ۚ— وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக, உங்கள் மனைவிகளிலும் உங்கள் பிள்ளைகளிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களிடம் நீங்கள் கவனமாக (உஷாராக, எச்சரிக்கையாக) இருங்கள். இன்னும், நீங்கள் பிழை பொறுத்தால், (அவர்களின் தவறுகளை) புறக்கணித்தால், (அவர்களை) மன்னித்தால் (அது மிகச் சிறந்தது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
15 : 64

اِنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ؕ— وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟

உங்கள் செல்வங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகள் எல்லாம் (உங்களுக்கு) சோதனைதான். அல்லாஹ், - அவனிடம்தான் (உங்களுக்கு சொர்க்கம் எனும்) மகத்தான வெகுமதி இருக்கிறது. info
التفاسير:

external-link copy
16 : 64

فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَاَطِیْعُوْا وَاَنْفِقُوْا خَیْرًا لِّاَنْفُسِكُمْ ؕ— وَمَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟

ஆக, உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள்! கீழ்ப்படியுங்கள்! உங்கள் ஆன்மாக்களின் நன்மைக்காக செல்வத்தை தர்மம் செய்யுங்கள்! எவர்கள் தமது ஆன்மாக்களின் கஞ்சத்தனத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
17 : 64

اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا یُّضٰعِفْهُ لَكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ— وَاللّٰهُ شَكُوْرٌ حَلِیْمٌ ۟ۙ

நீங்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தால் (-ஏழைகளுக்கு தர்மம் செய்தால்) அவன் உங்களுக்கு அதை பன்மடங்காகப் பெருக்குவான். இன்னும், உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மிகவும் நன்றி பாராட்டுபவன், மகா சகிப்பாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
18 : 64

عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠

(அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன், மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். info
التفاسير: