قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ

அல்ஜாஸியா

external-link copy
1 : 45

حٰمٓ ۟ۚ

ஹா மீம். info
التفاسير:

external-link copy
2 : 45

تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟

மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்பட்டது. info
التفاسير:

external-link copy
3 : 45

اِنَّ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ

நிச்சயமாக வானங்கள், இன்னும் பூமியில் பல அத்தாட்சிகள் நம்பிக்கையாளர்களுக்கு இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
4 : 45

وَفِیْ خَلْقِكُمْ وَمَا یَبُثُّ مِنْ دَآبَّةٍ اٰیٰتٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟ۙ

இன்னும், (அல்லாஹ்வின் வல்லமையை) உறுதியாக நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு உங்களைப் படைத்திருப்பதிலும் உயிரினங்களை அவன் (படைத்து பூமியின் பல பாகங்களில் அவற்றை) பரப்புவதிலும் பல அத்தாட்சிகள் உள்ளன. info
التفاسير:

external-link copy
5 : 45

وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِیْفِ الرِّیٰحِ اٰیٰتٌ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟

இன்னும், சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு இரவு, பகல் மாறி மாறி வருவதிலும்; வானத்தில் இருந்து மழையை இறக்கி அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் – உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை (பல திசைகளில்) திருப்புவதிலும் பல அத்தாட்சிகள் உள்ளன. info
التفاسير:

external-link copy
6 : 45

تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ۚ— فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَ اللّٰهِ وَاٰیٰتِهٖ یُؤْمِنُوْنَ ۟

இவை அல்லாஹ்வின் (வல்லமைகளை விவரிக்கும்) வசனங்களாகும். இவற்றை உம்மீது உண்மையாகவே நாம் ஓதுகிறோம். ஆக, அல்லாஹ்(வுடைய செய்திக்குப் பின்னர்) இன்னும், அவனது அத்தாட்சிகளுக்குப் பின்னர் எந்த செய்தியை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்? info
التفاسير:

external-link copy
7 : 45

وَیْلٌ لِّكُلِّ اَفَّاكٍ اَثِیْمٍ ۟ۙ

அதிகம் பொய் பேசுகின்ற பெரும் பாவிகள் ஒவ்வொருவருக்கும் நாசம்தான். info
التفاسير:

external-link copy
8 : 45

یَّسْمَعُ اٰیٰتِ اللّٰهِ تُتْلٰی عَلَیْهِ ثُمَّ یُصِرُّ مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ یَسْمَعْهَا ۚ— فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِیْمٍ ۟

அவன், தனக்கு முன் அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்படுவதை செவியுறுகிறான். பிறகு, பெருமை பிடித்தவனாக அவனோ அவற்றை செவியுறாதவனைப் போல (நிராகரிப்பிலேயே) பிடிவாதம் பிடிக்கிறான். ஆக, துன்புறுத்தும் தண்டனையைக் கொண்டு அவனுக்கு நற்செய்தி கூறுவீராக! info
التفاسير:

external-link copy
9 : 45

وَاِذَا عَلِمَ مِنْ اٰیٰتِنَا شَیْـَٔا ١تَّخَذَهَا هُزُوًا ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟ؕ

இன்னும், நமது வசனங்களில் எதையும் அவன் அறிந்தால் அதை கேலியாக எடுத்துக்கொள்கிறான். அவர்கள், இழிவுதரும் தண்டனை அவர்களுக்கு உண்டு. info
التفاسير:

external-link copy
10 : 45

مِنْ وَّرَآىِٕهِمْ جَهَنَّمُ ۚ— وَلَا یُغْنِیْ عَنْهُمْ مَّا كَسَبُوْا شَیْـًٔا وَّلَا مَا اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِیَآءَ ۚ— وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ؕ

அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது. அவர்கள் சம்பாதித்ததும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் எவற்றை (தங்கள்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்காது. இன்னும், பெரிய (கடுமையான) தண்டனை அவர்களுக்கு உண்டு. info
التفاسير:

external-link copy
11 : 45

هٰذَا هُدًی ۚ— وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِیْمٌ ۟۠

இது நேர்வழியாகும். எவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்தார்களோ - அவர்களுக்கு, அதிகம் வலி தருகின்ற கடுமையான தண்டனை உண்டு. info
التفاسير:

external-link copy
12 : 45

اَللّٰهُ الَّذِیْ سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِیَ الْفُلْكُ فِیْهِ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟ۚ

அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் உங்களுக்கு கடலை, - அதில் அவனது கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், அவனுடைய அருளிலிருந்து நீங்கள் (பொருளாதாரத்தை) தேடுவதற்காகவும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் – வசப்படுத்தினான். info
التفاسير:

external-link copy
13 : 45

وَسَخَّرَ لَكُمْ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ جَمِیْعًا مِّنْهُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

இன்னும், வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் - இவை அனைத்தையும் - அவன் உங்களுக்கு தன் புறத்திலிருந்து வசப்படுத்தினான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. info
التفاسير: