قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ

بەت نومۇرى:close

external-link copy
20 : 4

وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ— وَّاٰتَیْتُمْ اِحْدٰىهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَیْـًٔا ؕ— اَتَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟

நீங்கள் ஒரு மனைவியின் இடத்தில் (அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறு) ஒரு மனைவியை மாற்ற நாடினால் (-வேறு ஒரு பெண்ணை மணம் முடிக்க நாடினால்), அவர்களில் (விவாகரத்து செய்யப்படும்) ஒருத்திக்கு (தங்கக்) குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் (திரும்ப) கைப்பற்றாதீர்கள். அதுவோ அபாண்டமாகவும் வெளிப்படையான பாவமாகவும் இருக்கும் நிலையில் அதை நீங்கள் கைப்பற்றுகிறீர்களா? info
التفاسير:

external-link copy
21 : 4

وَكَیْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰی بَعْضُكُمْ اِلٰی بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟

உங்களில் சிலர் சிலருடன் (அன்போடும் அந்தரங்க வாழ்க்கையில் அன்னியோனியமாகவும் வாழ்ந்து ஒருவர் மற்றவருடன்) கலந்து விட்டிருக்கும் நிலையில்; இன்னும், அப்பெண்கள் உங்களிடம் உறுதியான வாக்குறுதியையும் வாங்கி இருக்கும் நிலையில் அதை எவ்வாறு நீங்கள் (திரும்ப) கைப்பற்றுவீர்கள்? info
التفاسير:

external-link copy
22 : 4

وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ— اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ— وَسَآءَ سَبِیْلًا ۟۠

முன்னர் நடந்த (திருமணத்)தைத் தவிர, (இஸ்லாம் வந்த பின்னர்) உங்கள் தந்தைகள் மணமுடித்தவர்களை நீங்கள் மணமுடிக்காதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கப்பட்டதாகவும் இருக்கிறது, இன்னும் இது கெட்ட பழக்கமாகும். info
التفاسير:

external-link copy
23 : 4

حُرِّمَتْ عَلَیْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِیْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَاُمَّهٰتُ نِسَآىِٕكُمْ وَرَبَآىِٕبُكُمُ الّٰتِیْ فِیْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآىِٕكُمُ الّٰتِیْ دَخَلْتُمْ بِهِنَّ ؗ— فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ ؗ— وَحَلَآىِٕلُ اَبْنَآىِٕكُمُ الَّذِیْنَ مِنْ اَصْلَابِكُمْ ۙ— وَاَنْ تَجْمَعُوْا بَیْنَ الْاُخْتَیْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۙ

உங்கள் தாய்மார்களும், உங்கள் மகள்களும், உங்கள் சகோதரிகளும், உங்கள் மாமிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், (உங்கள்) சகோதரனின் மகள்களும், (உங்கள்) சகோதரியின் மகள்களும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், பால் குடி சகோதரிகளும், உங்கள் மனைவிகளின் தாய்மார்களும் நீங்கள் உறவு கொண்டுவிட்ட உங்கள் மனைவிகளிலிருந்து உங்கள் மடிகளில் வளர்க்கப்படுகின்ற (அவர்களின்) பெண் பிள்ளைகளும் உங்களுக்கு (நீங்கள் மணம் முடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அவர்களுடன் உறவு கொண்டிருக்கவில்லையென்றால் (அவர்களை விவாகரத்து செய்தபின் அவர்களின் மகள்களை மணப்பது) உங்கள் மீது குற்றமில்லை. இன்னும், உங்கள் முதுகந்தண்டிலிருந்து (பிறந்த) உங்கள் சொந்த மகன்களின் மனைவிகளும் உங்கள் மீது (நீங்கள் மணம் முடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். இன்னும், இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்ப்பதும் உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்னர் நடந்ததைத் தவிர (அதை அல்லாஹ் மன்னிப்பான்). நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான். info
التفاسير: