قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ

بەت نومۇرى:close

external-link copy
44 : 24

یُقَلِّبُ اللّٰهُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ ۟

அல்லாஹ் இரவையும் பகலையும் (ஒன்றன் பின் ஒன்றை) மாற்றுகிறான். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது. info
التفاسير:

external-link copy
45 : 24

وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ ۚ— فَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰی بَطْنِهٖ ۚ— وَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰی رِجْلَیْنِ ۚ— وَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰۤی اَرْبَعٍ ؕ— یَخْلُقُ اللّٰهُ مَا یَشَآءُ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

அல்லாஹ் (இப்பூமியில் உள்ள) எல்லா உயிரினங்களையும் தண்ணீரிலிருந்து படைத்தான். ஆக, தனது வயிற்றின் மீது நடப்பவையும் அவர்களில் உண்டு. இன்னும், இரண்டு கால்கள் மீது நடப்பவையும் அவர்களில் உண்டு. இன்னும், நான்கு கால்கள் மீது நடப்பவையும் அவர்களில் உண்டு. அல்லாஹ், தான் நாடியதைப் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
46 : 24

لَقَدْ اَنْزَلْنَاۤ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ ؕ— وَاللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

திட்டவட்டமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். அல்லாஹ், தான் நாடியவருக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறான். info
التفاسير:

external-link copy
47 : 24

وَیَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ یَتَوَلّٰی فَرِیْقٌ مِّنْهُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ ؕ— وَمَاۤ اُولٰٓىِٕكَ بِالْمُؤْمِنِیْنَ ۟

அவர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் அல்லாஹ்வையும் தூதரையும் நம்பிக்கை கொண்டோம், இன்னும், (அவர்களுக்கு) கீழ்ப்படிந்தோம்” என்று. பிறகு, அவர்களில் ஒரு பிரிவினர் அதற்குப் பின்னர் (ஈமானை விட்டு) திரும்பி விடுகிறார்கள். அ(த்தகைய)வர்கள் நம்பிக்கையாளர்கள் இல்லை. info
التفاسير:

external-link copy
48 : 24

وَاِذَا دُعُوْۤا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ ۟

அவர்களுக்கு மத்தியில் தூதர் தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் பக்கம் அவர்கள் அழைக்கப்பட்டால், அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் (தூதரின் தீர்ப்பை) புறக்கணிக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
49 : 24

وَاِنْ یَّكُنْ لَّهُمُ الْحَقُّ یَاْتُوْۤا اِلَیْهِ مُذْعِنِیْنَ ۟ؕ

இன்னும், அவர்களுக்கு சாதகமாக சத்தியம் இருந்தால் (தீர்ப்புக்கு) கட்டுப்பட்டவர்களாக அவர் பக்கம் வருகிறார்கள். info
التفاسير:

external-link copy
50 : 24

اَفِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ یَخَافُوْنَ اَنْ یَّحِیْفَ اللّٰهُ عَلَیْهِمْ وَرَسُوْلُهٗ ؕ— بَلْ اُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟۠

அவர்களது உள்ளங்களில் நோய் இருக்கிறதா? அல்லது, அவர்கள் சந்தேகிக்கிறார்களா? அல்லது, அல்லாஹ்வும் அவனது தூதரும் அவர்கள் மீது அநீதியிழைத்து விடுவார்கள் என்று பயப்படுகிறார்களா? மாறாக, அவர்கள்தான் அநியாயக்காரர்கள். info
التفاسير:

external-link copy
51 : 24

اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِیْنَ اِذَا دُعُوْۤا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اَنْ یَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا ؕ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟

அவர்களுக்கு மத்தியில் தூதர் தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ் இன்னும் அவனது தூதர் பக்கம் நம்பிக்கையாளர்கள் அழைக்கப்பட்டால் அப்போது அந்த நம்பிக்கையாளர்களுடைய கூற்றாக இருப்பதெல்லாம், நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்று அவர்கள் கூறுவதுதான். இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவர். info
التفاسير:

external-link copy
52 : 24

وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَخْشَ اللّٰهَ وَیَتَّقْهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟

யார் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிவாரோ; இன்னும், அல்லாஹ்வை பயப்படுவாரோ; இன்னும், அவனை அஞ்சி நடப்பாரோ அ(த்தகைய)வர்கள்தான் (சொர்க்கத்தின்) நற்பாக்கியம் பெற்றவர்கள். info
التفاسير:

external-link copy
53 : 24

وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ اَمَرْتَهُمْ لَیَخْرُجُنَّ ؕ— قُلْ لَّا تُقْسِمُوْا ۚ— طَاعَةٌ مَّعْرُوْفَةٌ ؕ— اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟

அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தனர்: “நீர் அவர்களுக்கு கட்டளையிட்டால் நிச்சயமாக அவர்கள் (போருக்கு) புறப்பட்டு வருவார்கள்” என்று. (நபியே) கூறுவீராக: “நீங்கள் சத்தியமிடாதீர்கள். (உங்கள் கீழ்ப்படிதல் பொய் என்று) அறியப்பட்ட கீழ்ப்படிதலே.” நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தறிபவன் ஆவான். info
التفاسير: