قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ

بەت نومۇرى:close

external-link copy
56 : 22

اَلْمُلْكُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ؕ— یَحْكُمُ بَیْنَهُمْ ؕ— فَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟

அந்நாளில் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. அவர்களுக்கு மத்தியில் அவன் தீர்ப்பளிப்பான். ஆக, நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் இன்பமிகு சொர்க்கங்களில் இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
57 : 22

وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَا فَاُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟۠

எவர்கள் நிராகரித்து நமது வசனங்களை பொய்ப்பித்தனரோ, அவர்களுக்கு - இழிவுதரக்கூடிய தண்டனை உண்டு. info
التفاسير:

external-link copy
58 : 22

وَالَّذِیْنَ هَاجَرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ قُتِلُوْۤا اَوْ مَاتُوْا لَیَرْزُقَنَّهُمُ اللّٰهُ رِزْقًا حَسَنًا ؕ— وَاِنَّ اللّٰهَ لَهُوَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟

இன்னும், எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் “ஹிஜ்ரத்” நாடு துறந்து சென்று, பிறகு (எதிரிகளால்) கொல்லப்பட்டார்களோ; அல்லது, மரணித்து விட்டார்களோ நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அழகிய உணவைக் கொடுப்பான். நிச்சயமாக அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
59 : 22

لَیُدْخِلَنَّهُمْ مُّدْخَلًا یَّرْضَوْنَهٗ ؕ— وَاِنَّ اللّٰهَ لَعَلِیْمٌ حَلِیْمٌ ۟

நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் திருப்திபடுகின்ற இட(மான இன்பங்கள் நிறைந்த சொர்க்க)த்தில் அவர்களை பிரவேசிக்க செய்வான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், மகா சகிப்பாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
60 : 22

ذٰلِكَ ۚ— وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوْقِبَ بِهٖ ثُمَّ بُغِیَ عَلَیْهِ لَیَنْصُرَنَّهُ اللّٰهُ ؕ— اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ ۟

அது, (நம்பிக்கையாளர்கள் சொர்க்கம் செல்வது அல்லாஹ்வின் வெகுமதியாகும்). இன்னும், எவர் தான் தண்டிக்கப்பட்டதைப் போன்று (தன்னைத் தண்டித்தவரை) தண்டித்தாரோ, பிறகு, அவர் மீது (மீண்டும்) வன்முறை செய்யப்பட்டதோ நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் பிழை பொறுப்பாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
61 : 22

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ وَاَنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟

அ(நீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுவது எனக்கு மிக இலகுவான)து, ஏனெனில், (நான் அதற்கு ஆற்றல் உள்ளவன் ஆவேன். இன்னும்) நிச்சயமாக அல்லாஹ்(வின் வல்லமையாவது அவன்) இரவை பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் (அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனையை) நன்கு செவியுறுபவன், (அவரின் நிலையை) உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
62 : 22

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ هُوَ الْبَاطِلُ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِیُّ الْكَبِیْرُ ۟

அது (-இரவை பகலிலும் பகலை இரவிலும் நுழைப்பது அல்லாஹ்விற்கு மிக எளிதாகும்.) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். (எதையும் படைக்க ஆற்றல் உள்ளவன்). இன்னும், அவனையன்றி அவர்கள் அழைக்கின்றவை பொய்யானவையாகும். (-எதையும் படைப்பதற்கும் உருவாக்குவதற்கும் ஆற்றல் அற்றவை). இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன். info
التفاسير:

external-link copy
63 : 22

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؗ— فَتُصْبِحُ الْاَرْضُ مُخْضَرَّةً ؕ— اِنَّ اللّٰهَ لَطِیْفٌ خَبِیْرٌ ۟ۚ

நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குகிறான். ஆக, பூமி பசுமையாக மாறுகிறது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
64 : 22

لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟۠

வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமானவை. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மகா செல்வந்தன் (-நிறைவானவன், எத்தேவையுமற்றவன்), பெரும் புகழுக்குரியவன் ஆவான். info
التفاسير: