قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ

بەت نومۇرى:close

external-link copy
77 : 20

وَلَقَدْ اَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی ۙ۬— اَنْ اَسْرِ بِعِبَادِیْ فَاضْرِبْ لَهُمْ طَرِیْقًا فِی الْبَحْرِ یَبَسًا ۙ— لَّا تَخٰفُ دَرَكًا وَّلَا تَخْشٰی ۟

மூஸாவிற்கு திட்டவட்டமாக நாம் வஹ்யி அறிவித்தோம்: அதாவது, “என் அடியார்(களான இஸ்ரவேலர்)களை இரவில் அழைத்துச் செல்வீராக! ஆக, அவர்களுக்காக கடலில் (ஈரமற்ற) காய்ந்த பாதையை ஏற்படுத்துவீராக! (ஃபிர்அவ்னால் நீங்கள்) பிடிக்கப்படுவதை(யும்) நீர் பயப்பட மாட்டீர்; (கடலில் நீங்கள் மூழ்கிவிடுவதையும்) அஞ்சமாட்டீர்.” info
التفاسير:

external-link copy
78 : 20

فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُوْدِهٖ فَغَشِیَهُمْ مِّنَ الْیَمِّ مَا غَشِیَهُمْ ۟ؕ

ஃபிர்அவ்ன் தனது படைகளுடன் அவர்களை பின்தொடர்ந்தான். ஆக, அவர்களை கடலில் இருந்து எது சூழ இருந்ததோ அது அவர்களை சூழ்ந்து கொண்(டு அழித்து விட்)டது. info
التفاسير:

external-link copy
79 : 20

وَاَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهٗ وَمَا هَدٰی ۟

ஃபிர்அவ்ன் தன் சமுதாயத்தினரை வழிகெடுத்தான். இன்னும், (அவர்களுக்கு) அவன் நேர்வழி காட்டவில்லை. info
التفاسير:

external-link copy
80 : 20

یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ قَدْ اَنْجَیْنٰكُمْ مِّنْ عَدُوِّكُمْ وَوٰعَدْنٰكُمْ جَانِبَ الطُّوْرِ الْاَیْمَنَ وَنَزَّلْنَا عَلَیْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰی ۟

இஸ்ரவேலர்களே! திட்டமாக உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களை நாம் பாதுகாத்தோம். இன்னும், தூர் மலையின் வலது பகுதியை (நீங்கள் வந்தடையும்போது அங்கு தவ்ராத் கொடுக்கப்படும் என்று) உங்களுக்கு வாக்களித்தோம். இன்னும், உங்கள் மீது “மன்னு” “ஸல்வா” வை இறக்கினோம். info
التفاسير:

external-link copy
81 : 20

كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَلَا تَطْغَوْا فِیْهِ فَیَحِلَّ عَلَیْكُمْ غَضَبِیْ ۚ— وَمَنْ یَّحْلِلْ عَلَیْهِ غَضَبِیْ فَقَدْ هَوٰی ۟

நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து புசியுங்கள். அதில் எல்லை மீறாதீர்கள். (வாழ்வாதாரத்தை தேடுவதிலும் அதை செலவழிப்பதிலும் என் கட்டளையை மீறாதீர்கள்! அப்படி மீறினால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். இன்னும், எவன் மீது என் கோபம் இறங்கிவிடுமோ திட்டமாக அவன் (துர்ப்பாக்கியமடைந்து நரகத்தில்) வீழ்ந்து விடுவான். info
التفاسير:

external-link copy
82 : 20

وَاِنِّیْ لَغَفَّارٌ لِّمَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدٰی ۟

இன்னும், (பாவங்களிலிருந்து) யார் திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்மை செய்து பிறகு, நேர்வழி பெற்றாரோ அவரை நிச்சயமாக நான் மிகவும் மன்னிக்கக் கூடியவன் ஆவேன். info
التفاسير:

external-link copy
83 : 20

وَمَاۤ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ یٰمُوْسٰی ۟

மூஸாவே! உமது சமுதாயத்தை விட்டும் உம்மை எது விரைவுபடுத்தியது? info
التفاسير:

external-link copy
84 : 20

قَالَ هُمْ اُولَآءِ عَلٰۤی اَثَرِیْ وَعَجِلْتُ اِلَیْكَ رَبِّ لِتَرْضٰی ۟

அவர் கூறினார்: அவர்கள் என் அடிச்சுவட்டின் மீது (அதைப் பின்பற்றி எனக்குப் பின்னால் வந்த வண்ணமாக) இருக்கிறார்கள். இன்னும், “நீ (என் மீது) திருப்திபடுவதற்காக (அவர்களுக்கு முன்னால்) உன் பக்கம் நான் விரைந்(து வந்)தேன்.” info
التفاسير:

external-link copy
85 : 20

قَالَ فَاِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنْ بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِیُّ ۟

(அல்லாஹ்) கூறினான்: நிச்சயமாக நாம் உமக்குப் பின்னர் உமது சமுதாயத்தை திட்டமாக சோதித்தோம். இன்னும், அவர்களை ஸாமிரி வழிகெடுத்தான். info
التفاسير:

external-link copy
86 : 20

فَرَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۚ۬— قَالَ یٰقَوْمِ اَلَمْ یَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ؕ۬— اَفَطَالَ عَلَیْكُمُ الْعَهْدُ اَمْ اَرَدْتُّمْ اَنْ یَّحِلَّ عَلَیْكُمْ غَضَبٌ مِّنْ رَّبِّكُمْ فَاَخْلَفْتُمْ مَّوْعِدِیْ ۟

ஆக, மூஸா கோபமுற்றவராக, கவலையடைந்தவராக தனது சமுதாயத்திடம் திரும்பினார். அவர் கூறினார்: “என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகிய வாக்கை வாக்களிக்கவில்லையா? (என்னை விட்டுப் பிரிந்த) காலம் உங்களுக்கு தூரமாகிவிட்டதா? அல்லது, உங்கள் மீது உங்கள் இறைவன் புறத்திலிருந்து கோபம் இறங்குவதை நீங்கள் நாடுகிறீர்களா? அதனால் என் (இறைவன் நமக்கு) குறிப்பிட்ட நேரத்திற்கு (வராமல்) மாறு செய்தீர்களா?” info
التفاسير:

external-link copy
87 : 20

قَالُوْا مَاۤ اَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰكِنَّا حُمِّلْنَاۤ اَوْزَارًا مِّنْ زِیْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَی السَّامِرِیُّ ۟ۙ

அவர்கள் கூறினார்கள்: “உமது குறிப்பிட்ட நேரத்திற்கு (வராமல்) நாங்கள் எங்கள் விருப்பப்படி மாறுசெய்யவில்லை. என்றாலும் நாங்கள் (ஃபிர்அவ்னுடைய) மக்களின் ஆபரணங்களில் இருந்து பல சுமைகளை நாங்கள் சுமக்கும்படி ஏவப்பட்டோம். பிறகு, அவற்றை நாங்கள் (நெருப்பில்) எறிந்தோம். ஆக, அவ்வாறே சாமிரியும் (தன்னிடமுள்ளதை) எறிந்தான்.” info
التفاسير: