قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ

external-link copy
19 : 18

وَكَذٰلِكَ بَعَثْنٰهُمْ لِیَتَسَآءَلُوْا بَیْنَهُمْ ؕ— قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ ؕ— قَالُوْا لَبِثْنَا یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ ؕ— قَالُوْا رَبُّكُمْ اَعْلَمُ بِمَا لَبِثْتُمْ ؕ— فَابْعَثُوْۤا اَحَدَكُمْ بِوَرِقِكُمْ هٰذِهٖۤ اِلَی الْمَدِیْنَةِ فَلْیَنْظُرْ اَیُّهَاۤ اَزْكٰی طَعَامًا فَلْیَاْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ  وَلَا یُشْعِرَنَّ بِكُمْ اَحَدًا ۟

(நீண்ட காலமாகியும் எவ்வித மாற்றமும் அவர்களில் ஏற்படாதவாறு அவர்களை பாதுகாத்த) அவ்வாறே, அவர்கள் தங்களுக்கு மத்தியில் (தாங்கள் தூங்கிய கால அளவைப் பற்றி அவர்களுக்குள்) கேட்டுக் கொள்வதற்காக அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பினோம். “எத்தனை(க் காலம்) தங்கினீர்கள் என்று அவர்களில் ஒருவர் கூறினார். (மற்றவர்கள்) கூறினார்கள்: “ஒரு நாள்; அல்லது, ஒரு நாளின் சில பகுதி தங்கினோம்.”“உங்கள் இறைவன் நீங்கள் தங்கியதை மிக அறிந்தவன். ஆகவே, உங்களில் ஒருவரை உங்கள் வெள்ளி நாணயமாகிய இதைக் கொண்டு பட்டணத்திற்கு அனுப்புங்கள், அவர் அதில் மிக சுத்தமான (-ஹலாலான) உணவை விற்பவர் யார் என்று கவனித்து அவரிடமிருந்து உங்களுக்கு ஓர் உணவைக் கொண்டு வரட்டும். இன்னும், அவர் மதிநுட்பமாக நடக்கட்டும். மேலும், உங்களைப் பற்றி (நகரத்தில் எவர்) ஒருவருக்கும் உணர்த்திவிட வேண்டாம்” என்று(ம்) அவர்கள் கூறினார்கள். info
التفاسير: