قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ

بەت نومۇرى:close

external-link copy
35 : 16

وَقَالَ الَّذِیْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَا عَبَدْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَیْءٍ نَّحْنُ وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَیْءٍ ؕ— كَذٰلِكَ فَعَلَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۚ— فَهَلْ عَلَی الرُّسُلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟

இணைவைத்தவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனையன்றி வேறு எதையும் வணங்கியிருக்க மாட்டோம்; இன்னும், அவனுடைய அனுமதி இன்றி எதையும் தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்க மாட்டோம்.” இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (விதண்டாவாதம்) செய்தார்கள். ஆக, தூதர்கள் மீது தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர ஏதும் (பொறுப்பு) உண்டா? info
التفاسير:

external-link copy
36 : 16

وَلَقَدْ بَعَثْنَا فِیْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ ۚ— فَمِنْهُمْ مَّنْ هَدَی اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَیْهِ الضَّلٰلَةُ ؕ— فَسِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟

“அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், ஷைத்தானை விட்டும் விலகுங்கள்” என்று (போதிப்பதற்காக) ஒவ்வொரு சமுதாயத்திலும் திட்டவட்டமாக ஒரு தூதரை அனுப்பினோம். ஆக, அல்லாஹ் நேர்வழி காட்டியவர்களும் அவர்களில் உண்டு. இன்னும், வழிகேடு உறுதியாகி விட்டவர்களும் அவர்களில் உண்டு. ஆக, பூமியில் பயணியுங்கள்; இன்னும், (நபிகளைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று பாருங்கள். info
التفاسير:

external-link copy
37 : 16

اِنْ تَحْرِصْ عَلٰی هُدٰىهُمْ فَاِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ یُّضِلُّ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟

(நபியே!) அவர்கள் நேர்வழி காட்டப்படுவதின் மீது நீர் பேராசைப்பட்டாலும், (பிறரை) வழிகெடுப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான். இன்னும், உதவியாளர்கள் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
38 : 16

وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ ۙ— لَا یَبْعَثُ اللّٰهُ مَنْ یَّمُوْتُ ؕ— بَلٰی وَعْدًا عَلَیْهِ حَقًّا وَّلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟ۙ

மேலும், “இறந்து போகிறவர்களை அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்ப மாட்டான்” என்று அல்லாஹ்வின் மீது இவர்கள் மிக உறுதியாக சத்தியம் செய்தனர். அவ்வாறன்று, (“இறந்தவர்களை எழுப்புதல்” என்பது) அவன் மீது கடமையான (சத்திய) வாக்காகும்! எனினும், மக்களில் அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
39 : 16

لِیُبَیِّنَ لَهُمُ الَّذِیْ یَخْتَلِفُوْنَ فِیْهِ وَلِیَعْلَمَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّهُمْ كَانُوْا كٰذِبِیْنَ ۟

அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொள்கிறார்களோ அதை (அல்லாஹ்) அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், நிராகரித்தவர்கள் நிச்சயமாக தாம் பொய்யர்களாக இருந்தோம் என்பதை அறிவதற்காகவும் (மறுமையில் அவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்). info
التفاسير:

external-link copy
40 : 16

اِنَّمَا قَوْلُنَا لِشَیْءٍ اِذَاۤ اَرَدْنٰهُ اَنْ نَّقُوْلَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟۠

நாம் ஒரு பொருளை (உருவாக்க) நாடினால், அதற்கு நாம் (கூறுகிற) கூற்றெல்லாம் “ஆகு!” என்று கூறுவதுதான். (உடனே அது) ஆகிவிடும். info
التفاسير:

external-link copy
41 : 16

وَالَّذِیْنَ هَاجَرُوْا فِی اللّٰهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا لَنُبَوِّئَنَّهُمْ فِی الدُّنْیَا حَسَنَةً ؕ— وَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟ۙ

இன்னும், எவர்கள் தங்களுக்கு அநீதியிழைக்கப்பட்ட பின்பு அல்லாஹ்விற்காக(த் தங்கள் ஊரை அல்லது தங்கள் நாட்டை) துறந்து சென்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகில் அழகிய (இருப்பிடத்)தை அமை(த்து கொடுத்து அதில் வசிக்க வை)ப்போம். (அவர்களுக்குரிய) மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரியது. (இதை எல்லோரும்) அறிந்திருக்க வேண்டுமே! info
التفاسير:

external-link copy
42 : 16

الَّذِیْنَ صَبَرُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟

அவர்கள் (சோதனைகளில்) பொறுமையாக இருந்தார்கள். இன்னும், தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)ப்பார்கள். info
التفاسير: