قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ

ஹூத்

external-link copy
1 : 11

الٓرٰ ۫— كِتٰبٌ اُحْكِمَتْ اٰیٰتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِیْمٍ خَبِیْرٍ ۟ۙ

அலிஃப் லாம் றா. (இது) ஒரு வேத நூல். மகா ஞானவான், ஆழ்ந்தறிந்தவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானத்துடன் உறுதி செய்யப்பட்டன. பிறகு, அவை (நபியவர்களுக்கு ஒவ்வொரு சட்டமாக) தெளிவுபடுத்தப்பட்(டு விவரிக்கப்பட்)டன. info
التفاسير:

external-link copy
2 : 11

اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ— اِنَّنِیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ وَّبَشِیْرٌ ۟ۙ

“நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! நிச்சயமாக நான் உங்களுக்கு அவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) எச்சரிப்பாளரும் நற்செய்தியாளரும் ஆவேன்.” info
التفاسير:

external-link copy
3 : 11

وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّیُؤْتِ كُلَّ ذِیْ فَضْلٍ فَضْلَهٗ ؕ— وَاِنْ تَوَلَّوْا فَاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ كَبِیْرٍ ۟

“இன்னும், நிச்சயமாக உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். பிறகு, முற்றிலும் திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால் நீங்கள் உலகத்தில் வாழ்கின்ற) குறிப்பிடப்பட்ட காலம் வரை உங்களுக்கு அழகிய சுகமான வாழ்க்கையை வழங்குவான். இன்னும், மேல் மிச்சமான செல்வமுடையவ(ர் தனது செல்வத்தை தர்மம் செய்யும்போது அவ)ருக்கு (மேலும்) அவருடைய செல்வத்தை (அதிகப்படுத்தி) கொடுப்பான். இன்னும், நீங்கள் புறக்கணித்தால் மாபெரும் (மறுமை) நாளின் தண்டனையை நிச்சயமாக நான் உங்கள் மீது பயப்படுகிறேன்.” info
التفاسير:

external-link copy
4 : 11

اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ ۚ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

“அல்லாஹ்வின் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. இன்னும், அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன்.” info
التفاسير:

external-link copy
5 : 11

اَلَاۤ اِنَّهُمْ یَثْنُوْنَ صُدُوْرَهُمْ لِیَسْتَخْفُوْا مِنْهُ ؕ— اَلَا حِیْنَ یَسْتَغْشُوْنَ ثِیَابَهُمْ ۙ— یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۚ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

(நபியே!) அறிவீராக! “நிச்சயமாக இவர்கள் அவனிடமிருந்து மறைப்பதற்காக தங்கள் நெஞ்சங்களை திருப்புகிறார்கள். (நபியே!) அறிவீராக! அவர்கள் தங்கள் ஆடைகளால் (தங்களை) மறைத்துக்கொள்ளும் நேரத்தில் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் நன்கறிகிறான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிபவன் ஆவான்.” info
التفاسير: