قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
9 : 61

هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ ۙ— وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ ۟۠

61.9. அல்லாஹ்தான் ஏனைய மார்க்கங்களைவிட தன் மார்க்கத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக தன் தூதர் முஹம்மதை இஸ்லாம் என்னும் மார்க்கத்தைக் கொண்டு அனுப்பினான். அது நன்மையின்பால் வழிகாட்டக்கூடிய, பயனுள்ள கல்வியையும் நற்செயலையும் அளிக்கக்கூடிய நேர்வழியான மார்க்கமாகும். அது பூமியில் மேலோங்குவது இணைவைப்பாளர்களுக்கு வெறுப்பாக இருந்தாலும் சரியே. info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• تبشير الرسالات السابقة بنبينا صلى الله عليه وسلم دلالة على صدق نبوته.
1. முன்சென்ற தூதுகள் நமது நபியவர்களைப் பற்றித் நன்மாராயம் கூறியிருப்பது அவரது நபித்துவத்தின் நம்பகத்தன்மைக்கான ஆதாரமாகும். info

• التمكين للدين سُنَّة إلهية.
2. மார்க்கத்தை மேலோங்கச் செய்வது இறைவனின் நியதியாகும். info

• الإيمان والجهاد في سبيل الله من أسباب دخول الجنة.
3. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய பாதையில் ஜிஹாது செய்வது சுவனத்தில் பிரவேசிக்கச் செய்யும் காரணிகளில் ஒன்றாகும். info

• قد يعجل الله جزاء المؤمن في الدنيا، وقد يدخره له في الآخرة لكنه لا يُضَيِّعه - سبحانه -.
4. நம்பிக்கையாளனுடைய கூலியை சில வேளை அல்லாஹ் உலகிலேயே விரைவாக வழங்குவான். சில வேளை மறுமையிலே வழங்குவதற்காக அதனை சேகரித்துவைத்திருப்பான். ஆனால் அதனை ஒரு போதும் வீணாக்கிவிடமாட்டான். info