قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
16 : 52

اِصْلَوْهَا فَاصْبِرُوْۤا اَوْ لَا تَصْبِرُوْا ۚ— سَوَآءٌ عَلَیْكُمْ ؕ— اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

52.16. இந்த நெருப்பின் வெப்பத்தைச் சுவைத்து அனுபவியுங்கள். நீங்கள் அதன் வெப்பத்தை பொறுமையாக சகித்துக் கொள்ளுங்கள் அல்லது சகித்துக் கொள்ளாமலிருங்கள். பொறுமைகொள்வதும் பொறுமை கொள்ளாமல் இருப்பதும் இரண்டும் உங்களுக்கு ஒன்றுதான். இன்றைய தினம் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றுக்குத்தான் கூலி கொடுக்கப்படுகிறீர்கள். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• الجمع بين الآباء والأبناء في الجنة في منزلة واحدة وإن قصر عمل بعضهم إكرامًا لهم جميعًا حتى تتم الفرحة.
1. தந்தையரும் அவர்களின் சந்ததியினரும் செயல்களின் அடிப்படையில் சிலர் குறைவானவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கௌரவித்து, சந்தோசம் முழுமையடைவதற்காக சுவர்க்கத்தில் ஒரே படித்தரத்தில் ஒன்றுசேர்க்கப்படுவார்கள். info

• خمر الآخرة لا يترتب على شربها مكروه.
2. மறுமையில் வழங்கப்படும் மதுவை அருந்துவதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. info

• من خاف من ربه في دنياه أمّنه في آخرته.
3. யார் உலகில் தம் இறைவனை அஞ்சினாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் பாதுகாப்பு வழங்குவான். info