قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
50 : 5

اَفَحُكْمَ الْجَاهِلِیَّةِ یَبْغُوْنَ ؕ— وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟۠

5.50. தங்கள் மனஇச்சைப்படி தீர்ப்பளிக்கும் சிலை வணங்கிகளான அறியாமைக் கால மக்களின் தீர்ப்பை வேண்டியவர்களாக உம்முடைய தீர்ப்பை புறக்கணிக்கின்றனரா?! அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியதை புரிந்துகொள்ளும் உறுதியான நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வைவிட சிறந்த நீதிபதி யாரும் இல்லை. அசத்தியமாக இருந்தாலும் தங்களின் மனஇச்சைக்கு ஒத்ததை மாத்திரமே ஏற்றுக்கொள்ளும் மூடர்களுக்கல்ல. info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• الأنبياء متفقون في أصول الدين مع وجود بعض الفروق بين شرائعهم في الفروع.
1. மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களில் தூதர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளார்கள். கிளை அம்சங்களான சட்டதிட்டங்களில் சிறு வேறுபாடுகள் காணப்படுகிறது. info

• وجوب تحكيم شرع الله والإعراض عمّا عداه من الأهواء.
2. அல்லாஹ்வின் சட்டங்களை ஏற்றுக்கொள்வதும் அவற்றைத் தவிரவுள்ள மனஇச்சைகளைப் புறக்கணித்துவிடுவதும் கட்டாயமாகும். info

• ذم التحاكم إلى أحكام أهل الجاهلية وأعرافهم.
3. அறியாமைக் கால சட்டங்களின்படியோ வழக்கத்தின்படியோ தீர்ப்புத் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது. info