قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
27 : 48

لَقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْیَا بِالْحَقِّ ۚ— لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۙ— مُحَلِّقِیْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِیْنَ ۙ— لَا تَخَافُوْنَ ؕ— فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِیْبًا ۟

48.27. அல்லாஹ் தன் தூதரின் உறக்கத்தில் கனவைக் காட்டி தனது தூதருக்கு அதில் உண்மையையே கூறினான். தூதரும் அதனைத் தன் தோழர்களுக்கு அறிவித்தார். நிச்சயமாக அவரும் அவருடைய தோழர்களும் அல்லாஹ்வின் புனித இல்லத்தில் எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் நுழைவார்கள். கிரிகைகளை பூர்த்திசெய்ததன் அடையாளமாக அவர்களில் சிலர் தலைமுடியை மழித்தவர்களாவும் சிலர் குறைத்தவர்களாகவும் இருப்பார்கள் என்பதே அக்கனவாகும். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்களுக்குத் தெரியாத உங்கள் நலவுகளையும் அறிந்துவைத்துள்ளான். எனவேதான் அந்த வருடமே மக்காவில் நுழைந்து, கனவு நிறைவேறாமல் இருந்ததன் மூலம் அவசரமான ஒரு வெற்றியை அளித்தான். அதுதான் அல்லாஹ் நிகழவைத்த ஹுதைபிய்யா உடன்படிக்கையும், அதனைத் தொடர்ந்து ஹுதைபிய்யாவில் கலந்துகொண்ட நம்பிக்கையாளர்களுக்குக் கிடைத்த கைபர் வெற்றியுமாகும். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• الصد عن سبيل الله جريمة يستحق أصحابها العذاب الأليم.
1. அல்லாஹ்வின் பாதையைவிட்டும் மக்களைத் தடுப்பது குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் வேதனைமிக்க தண்டனைக்கு உரியவர்களாவர். info

• تدبير الله لمصالح عباده فوق مستوى علمهم المحدود.
2. தன் அடியார்களின் நலன்களை அல்லாஹ் திட்டமிடுவது அவர்களின் வரையறுக்கப்பட்ட அறிவுத் தரத்தைவிட மேலானது. info

• التحذير من استبدال رابطة الدين بحمية النسب أو الجاهلية.
3. மதத் தொடர்பை வம்சவாதம் மற்றும் அறியாமையினால் மாற்றிக்கொள்வதை விட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. info

• ظهور دين الإسلام سُنَّة ووعد إلهي تحقق.
4.இஸ்லாமிய மார்க்கம் மேலோங்குவது நடைபெற்றுமுடிந்த இறைவாக்குறுதியும் வழிமுறையுமாகும். info