قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
36 : 34

قُلْ اِنَّ رَبِّیْ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠

34.36. -தூதரே!- தங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளைக்கொண்டு ஏமாந்த இவர்களிடம் நீர் கூறுவீராக: “அடியார்கள் நன்றி செலுத்துகிறார்களா? அல்லது நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்களா? என்பதை சோதிக்கும்பொருட்டு என் இறைவன் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். அவர்கள் பொறுமையைக் கடைபிடிக்கிறார்களா? அல்லது கோபம் கொள்கிறார்களா? என்பதைச் சோதிக்கும் பொருட்டுதான் நாடியவர்களுக்கு அதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர், அல்லாஹ் ஞானம் மிக்கவன், அவன் உயர்ந்த ஒரு நோக்கம் இன்றி ஒரு விடயத்தை நிர்ணயிக்க மாட்டான் என்பதை அறியமாட்டார்கள். அந்நோக்கம் புரிபவர்களுக்குப் புரியும். புரியாதவர்களுக்குப் புரியாது. info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• تبرؤ الأتباع والمتبوعين بعضهم من بعض، لا يُعْفِي كلًّا من مسؤوليته.
1. பின்பற்றிய தொண்டர்களும் பின்பற்றப்பட்ட தலைவர்களும் ஒருவருக்கொருவர் விலகிக்கொள்வது அவர்களில் எவரையும் பொறுப்புக் கூறுவதிலிருந்து விடுவிக்காது. info

• الترف مُبْعِد عن الإذعان للحق والانقياد له.
2. உல்லாச வாழ்வு சத்தியத்திற்கு அடிபணிய விடாமல் தூரமாக்குகிறது. info

• المؤمن ينفعه ماله وولده، والكافر لا ينتفع بهما.
3. நம்பிக்கையாளனின் செல்வமும் பிள்ளைகளும் அவனுக்குப் பயனளிக்கும். ஆனால் நிராகரிப்பாளனுக்கு அவையிரண்டிலும் எந்தப் பயனும் இல்லை. info

• الإنفاق في سبيل الله يؤدي إلى إخلاف المال في الدنيا، والجزاء الحسن في الآخرة.
4. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது இவ்வுலகில் பணத்தின் மூலம் சிறந்த பிரதிபலனைத் தருவதோடு மறுமையில் நற்கூலியையும் தருகிறது. info