قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
3 : 34

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَاْتِیْنَا السَّاعَةُ ؕ— قُلْ بَلٰی وَرَبِّیْ لَتَاْتِیَنَّكُمْ ۙ— عٰلِمِ الْغَیْبِ ۚ— لَا یَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟ۙ

34.3. “மறுமை நாள் ஒரு போதும் ஏற்படாது” என்று அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக, அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் பொய்யெனக் கூறும் மறுமை ஏற்பட்டே தீரும். ஆயினும் அது ஏற்படும் சமயத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். அவன் மறைவாக உள்ள மறுமையையும் இன்னபிறவற்றையும் அறியக்கூடியவன். வானங்களிலோ, பூமியிலோ சிறு எறும்பின் அளவோ அல்லது மேலே கூறியதைவிட சிறியதோ, பெரியதோ எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அனைத்தும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மறுமை வரை நிகழும் அனைத்தும் அதில் பதியப்பட்டுள்ளது. info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• سعة علم الله سبحانه المحيط بكل شيء.
1. அனைத்தையும் சூழ்ந்த அல்லாஹ்வின் அறிவின் விசாலம். info

• فضل أهل العلم.
2. அறிஞர்களின் சிறப்பு. info

• إنكار المشركين لبعث الأجساد تَنَكُّر لقدرة الله الذي خلقهم.
3. இணைவைப்பாளர்கள், உடல்கள் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பது அவர்களைப் படைத்த இறைவனின் ஆற்றலை மறுப்பதாகும். info