قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
18 : 3

شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۙ— وَالْمَلٰٓىِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآىِٕمًا بِالْقِسْطِ ؕ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ؕ

3.18. உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்று அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான். அவனுடைய சாட்சி என்பது குர்ஆனிலும் பிரபஞ்சத்திலும் அவன் ஏற்படுத்திய சான்றுகளாகும். அதற்கு வானவர்களும் சாட்சி கூறுகிறார்கள். கல்வியாளர்களும் ஓரிறைக்கொள்கையை விளக்குவதன் மூலமும் அதன்பால் அழைப்புவிடுப்பதன் மூலமும் சாட்சி கூறுகிறார்கள். அவர்கள் அல்லாஹ் ஒருவனே என்றும் அவன் தன் படைப்புகளில், சட்டங்களில் நீதியை நிலைநிறுத்தக்கூடியவன் என்ற மிகப் பெரும் ஒரு விடயத்திற்கு சாட்சி கூறியுள்ளார்கள். வணக்கத்திற்குத் தகுதியானவன் அவனைத்தவிர வேறு யாரும் இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன். எதுவும் அவனை மிகைக்க முடியாது. அவன் தன் படைப்பிலும், நிர்வகிப்பதிலும், சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்கவன். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• من أعظم ما يُكفِّر الذنوب ويقي عذاب النار الإيمان بالله تعالى واتباع ما جاء به الرسول صلى الله عليه وسلم.
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றுவதே மிகப் பிரதானமாக பாவங்களுக்குப் பரிகாரமாக அமைவதோடு நரக வேதனையை விட்டும் பாதுகாக்கும். info

• أعظم شهادة وحقيقة هي ألوهية الله تعالى ولهذا شهد الله بها لنفسه، وشهد بها ملائكته، وشهد بها أولو العلم ممن خلق.
2. மிகப்பெரிய உண்மையும் சாட்சியமும், "வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே"என்பதாகும். எனவேதான் அல்லாஹ்வே இதற்கு சாட்சி கூறுகின்றான். அவனது படைப்பினங்களில் வானவர்களும் கல்வியாளர்களும் சாட்சி கூறுகிறார்கள். info

• البغي والحسد من أعظم أسباب النزاع والصرف عن الحق.
3. சர்ச்சைக்கும், சத்தியத்தை விட்டும் திரும்புதற்கும் முக்கிய காரணிகள் அத்துமீறலும் பொறாமையுமே. info