قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

بەت نومۇرى:close

external-link copy
7 : 29

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَنَجْزِیَنَّهُمْ اَحْسَنَ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟

29.7. யார் நம்பிக்கைகொண்டு நாம் அவர்களுக்கு அளித்த சோதனையை பொறுமையாக எதிர்கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களின் நற்செயல்களுக்குப் பகரமாக நாம் அவர்களின் பாவங்களை மன்னித்திடுவோம். அவர்கள் இவ்வுலகில் செய்த செயல்களுக்கு மறுமையில் மிகச் சிறந்த கூலியை வழங்கிடுவோம். info
التفاسير:

external-link copy
8 : 29

وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ حُسْنًا ؕ— وَاِنْ جٰهَدٰكَ لِتُشْرِكَ بِیْ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ؕ— اِلَیَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

29.8. தாய், தந்தையருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளும்படி, அவர்களுக்கு உபகாரம் செய்யும்படி நாம் மனிதனுக்கு வஸிய்யத் செய்துள்ளோம். -மனிதனே!- உன் தாய், தந்தையர் -ஸஃத் இப்னு அபீ வக்காஸ் அவர்களுக்கு நிகழ்ந்தது போன்று- உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு இணையாக்குமாறு உன்னை வற்புறுத்தினால் அவர்கள் இருவருக்கும் கட்டுப்படாதே. ஏனெனில் நிச்சயமாக படைப்பாளனின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு படைப்புகளுக்கு கட்டுப்படக்கூடாது. நீங்கள் மறுமை நாளில் என்பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்கள் அனைத்தையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவேன். info
التفاسير:

external-link copy
9 : 29

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِی الصّٰلِحِیْنَ ۟

29.9. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களை நாம் மறுமையில் நல்லவர்களில் சேர்த்து அவர்களுடனே எழுப்பி, அவர்களுடைய கூலியை வழங்குவோம். info
التفاسير:

external-link copy
10 : 29

وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَاۤ اُوْذِیَ فِی اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِ ؕ— وَلَىِٕنْ جَآءَ نَصْرٌ مِّنْ رَّبِّكَ لَیَقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْ ؕ— اَوَلَیْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِیْ صُدُوْرِ الْعٰلَمِیْنَ ۟

29.10. மக்களில் சிலர், “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டோம்“ என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் நிராகரிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்டால் அவர்களின் வேதனையை அல்லாஹ்வின் வேதனையைப் போன்று ஆக்கி நிராகரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப ஈமானை விட்டும் பின்வாங்கி விடுகிறார்கள். -தூதரே!- உமக்கு உம் இறைவனிடமிருந்து ஏதேனும் வெற்றி கிடைத்தால், “நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக நாங்களும் உங்களுடன் நம்பிக்கையாளர்களாக இருந்தோம்” என்று கூறுகிறார்கள். மக்களின் உள்ளங்களிலுள்ளவற்றை அல்லாஹ் அறிந்தவனில்லையா? உள்ளங்களிலுள்ள நம்பிக்கை, நிராகரிப்பு எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. உள்ளங்களிலுள்ளவற்றை அல்லாஹ்வே அவர்களை விட நன்கறிந்தவனாக இருக்கும் போது, அவற்றில் என்ன உள்ளது என அவர்கள் அல்லாஹ்வுக்கு சொல்லிக் கொடுக்கிறார்களா?. info
التفاسير:

external-link copy
11 : 29

وَلَیَعْلَمَنَّ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَلَیَعْلَمَنَّ الْمُنٰفِقِیْنَ ۟

29.11. உண்மையாகவே அவனை நம்பிக்கைகொண்டவர்களையும் நம்பிக்கையை வெளிப்படுத்தி நிராகரிப்பை மறைக்கும் நயவஞ்சகர்களையும் அல்லாஹ் நிச்சயம் அறிவான். info
التفاسير:

external-link copy
12 : 29

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوا اتَّبِعُوْا سَبِیْلَنَا وَلْنَحْمِلْ خَطٰیٰكُمْ ؕ— وَمَا هُمْ بِحٰمِلِیْنَ مِنْ خَطٰیٰهُمْ مِّنْ شَیْءٍ ؕ— اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟

29.12. நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வை மட்டும் நம்பிக்கைகொண்டவர்களிடம் கூறுகிறார்கள்: “நாங்கள் பின்பற்றும் எங்களின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். உங்களின் பாவங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம். நாங்கள் அவற்றிற்காக தண்டனையை பெற்றுக்கொள்கிறோம்.” அவர்கள் இவர்களின் பாவங்களிலிருந்து எதையும் சுமப்பவர்களல்ல. நிச்சயமாக தங்களின் இந்த கூற்றில் அவர்கள் பொய்யர்களே. info
التفاسير:

external-link copy
13 : 29

وَلَیَحْمِلُنَّ اَثْقَالَهُمْ وَاَثْقَالًا مَّعَ اَثْقَالِهِمْ ؗ— وَلَیُسْـَٔلُنَّ یَوْمَ الْقِیٰمَةِ عَمَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠

29.13. அசத்தியத்தின்பால் அழைக்கும் இந்த இணைவைப்பாளர்கள் தான் செய்த பாவங்களை சுமப்பார்கள், தங்களின் அழைப்பை ஏற்று பின்பற்றியவர்களின் பாவங்களையும் சுமப்பார்கள். ஆனால் பின்பற்றியவர்களின் பாவத்தில் எதுவும் குறைந்துவிடாது. அவர்கள் இவ்வுலகில் இட்டுக்கட்டிக் கொண்டிருந்த பொய்களைக் குறித்து மறுமை நாளில் விசாரிக்கப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
14 : 29

وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَلَبِثَ فِیْهِمْ اَلْفَ سَنَةٍ اِلَّا خَمْسِیْنَ عَامًا ؕ— فَاَخَذَهُمُ الطُّوْفَانُ وَهُمْ ظٰلِمُوْنَ ۟

29.14. நாம் நூஹை அவரது சமூகத்தின்பால் தூதராக அனுப்பினோம். அவர் தொள்ளாயிரத்து ஐம்பது வருடங்கள் அவர்களிடையே தங்கியிருந்து அவர்களை ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைத்தார். அவர்கள் அவரை பொய்ப்பித்தார்கள். தொடர்ந்தும் தமது நிராகரிப்பிலேயே இருந்தார்கள். அல்லாஹ்வை நிராகரித்து தூதர்களைப் பொய்ப்பித்து அநியாயக்காரர்களாகிவிட்ட நிலையில் வெள்ளப் பிரளயம் அவர்களைத் தாக்கியது. எனவே மூழ்கி அவர்கள் அழிந்தார்கள். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• الأعمال الصالحة يُكَفِّر الله بها الذنوب.
1. நற்செயல்களை அல்லாஹ் பாவங்களுக்குப் பரிகாரமாக ஆக்குகின்றான். info

• تأكُّد وجوب البر بالأبوين.
2. பெற்றோருடன் நல்ல முறையில் நடந்துகொள்வதன் அவசியத்தை உறுதிசெய்தல். info

• الإيمان بالله يقتضي الصبر على الأذى في سبيله.
3. அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கை அவனுடைய பாதையில் ஏற்படும் துன்பங்களை பொறுமையாக சகித்துக் கொள்வதை வேண்டிநிற்கின்றது info

• من سنَّ سُنَّة سيئة فعليه وزرها ووزر من عمل بها من غير أن ينقص من أوزارهم شيء.
4. யார் ஒரு தீய வழிமுறையை அறிமுகப்படுத்துவாரோ அதன் தீமையும் அதன்படி செயற்படுவோரின் தீமையும் அவரையே சாரும். ஆனால் பின்பற்றியோரின் தீமையில் எந்தக் குறையும் ஏற்படாது. info