قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
29 : 24

لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ مَسْكُوْنَةٍ فِیْهَا مَتَاعٌ لَّكُمْ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ۟

24.29. நூலகங்கள், சந்தையிலுள்ள உணவகங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள, யாருக்கும் சொந்தமில்லாத பொது இடங்களில் நீங்கள் அனுமதியின்றி நுழைவதில் குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்தும் உங்களின் செயல்களையும், நிலைமைகளையும், நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• جواز دخول المباني العامة دون استئذان.
1. பொது இடங்களில் அனுமதியின்றி நுழையலாம். info

• وجوب غض البصر على الرجال والنساء عما لا يحلّ لهم.
2. ஆண்களும், பெண்களும் தங்களுக்கு அனுமதியில்லாதவற்றை விட்டும் பார்வையைத் தாழ்த்துவது அவசியமாகும். info

• وجوب الحجاب على المرأة.
3. பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாகும். info

• منع استخدام وسائل الإثارة.
4. இச்சைகளைத் தூண்டும் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தல். info