قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
37 : 13

وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِیًّا ؕ— وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ— مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا وَاقٍ ۟۠

13.37. -தூதரே!- முந்தைய வேதங்களை அந்தந்த மக்களின் மொழிகளிலேயே நாம் இறக்கியது போன்று உம்மீதும் குர்ஆனை, சத்தியத்தை தெளிவுபடுத்தக்கூடியதாக அரபி மொழியில் இறக்கினோம். -தூதரே!- அல்லாஹ் உமக்குக் கற்றுக் கொடுத்த தெளிவான அறிவு உம்மிடம் வந்த பின்னரும் தமது மன இச்சைக்கு ஒத்துவராதவற்றை நீக்குமாறு வேதக்காரர்கள் பேரம் பேசுவதில் அவர்களின் மன இச்சையை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றும் பாதுகாவலர்களோ உம் எதிரிகளுக்கு எதிராக உமக்கு உதவக் கூடியவர்களோ யாரும் இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து உம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• الترغيب في الجنة ببيان صفتها، من جريان الأنهار وديمومة الرزق والظل.
1. நதிகள் ஓடுதல், நிலையான வாழ்வாதாரம், நிழல் ஆகிய வர்ணனைகள் கூறப்பட்டு சுவனத்தை ஆர்வமூட்டப்பட்டுள்ளது. info

• خطورة اتباع الهوى بعد ورود العلم وأنه من أسباب عذاب الله.
2. அறிந்த பின்னரும் மன இச்சையைப் பின்பற்றுவது பாரதூரமானது. அல்லாஹ்வின் வேதனைக்கான காரணிகளில் ஒன்றாகும். info

• بيان أن الرسل بشر، لهم أزواج وذريات، وأن نبينا صلى الله عليه وسلم ليس بدعًا بينهم، فقد كان مماثلًا لهم في ذلك.
3. தூதர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள். அவர்களுக்கு மனைவியரும் பிள்ளைகளும் இருந்தார்கள். நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்களில் புதுமையானவர் அல்ல. அந்த விடயத்தில் முன்சென்ற தூதர்களைப் போலவே இருந்தார்கள். என்ற விடயம் தெளிவாக்கப்பட்டுள்ளது. info