قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
8 : 12

اِذْ قَالُوْا لَیُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰۤی اَبِیْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ ؕ— اِنَّ اَبَانَا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنِ ۟ۙۖ

12.8. சகோதரர்கள் தங்களிடையே பின்வருமாறு பேசிக்கொண்டார்கள்: “யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம்மைவிட நம் தந்தைக்குப் பிரியனமாவர்களாக இருக்கிறார்கள். நாம்தாம் அதிக எண்ணிக்கையுடைய கூட்டத்தினர். எவ்வாறு நம்மைவிட அவர்கள் இருவருக்கும் அவர் முக்கியத்துவம் வழங்கலாம்? எமக்குத் தோன்றும் விதமான எவ்வித காரணமுமின்றி நம்மைவிட அவர்கள் இருவருக்கும் முக்கியத்துவம் வழங்கியதனால் அவர் தெளிவான தவறில் உள்ளதாகவே நாம் கருதுகிறோம்.” info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• ثبوت الرؤيا شرعًا، وجواز تعبيرها.
1. மார்க்க அடிப்படையில் கனவு நிரூபனமானது. அதற்கு விளக்கம் கூறுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. info

• مشروعية كتمان بعض الحقائق إن ترتب على إظهارها شيءٌ من الأذى.
2. வெளிப்படுத்தப்பட்டால் தீங்கு நேரும் என்னும் நிலையிலுள்ள சில உண்மைகளை மறைப்பது அனுமதிக்கப்பட்டதாகும். info

• بيان فضل ذرية آل إبراهيم واصطفائهم على الناس بالنبوة.
3. இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததிகளின் சிறப்பு தெளிவாகிறது. தூதுத்துவம் மூலம் மற்ற மக்களைவிட அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். info

• الميل إلى أحد الأبناء بالحب يورث العداوة والحسد بين الإِخوة.
4. மற்ற பிள்ளைகளை விட்டு விட்டு ஒரு பிள்ளையின் மீது மட்டும் அதிக அன்பு செலுத்துதல் சகோதரர்களிடையே பொறாமையும் குரோதமும் ஏற்பட காரணமாக அமைகிறது. info