قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
61 : 11

وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ— قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِیْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ ؕ— اِنَّ رَبِّیْ قَرِیْبٌ مُّجِیْبٌ ۟

11.61. ஸமூத் சமூகத்தின்பால் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவனே உங்களின் தந்தை ஆதமை பூமியின் மண்ணிலிருந்து படைத்ததன் மூலம் உங்களை மண்ணிலிருந்து படைத்தான். உங்களை அதில் வசிப்போராக்கினான். எனவே அவனிடமே மன்னிப்பைக் கோருங்கள். பின்பு நற்காரியங்கள் செய்து தீமைகளைத் தவிர்த்து அவனிடமே மீண்டுவாருங்கள். நிச்சயமாக என் இறைவன் அவனை மட்டுமே வணங்கக்கூடியவர்களுக்கு நெருக்கமானவனாகவும் அவனிடம் பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• من وسائل المشركين في التنفير من الرسل الاتهام بخفة العقل والجنون.
1. நபிமார்களை விட்டும் வெறுப்பூட்டுவதற்கான இணைவைப்பாளர்களின் வழிமுறைகளில் ஒன்றே, புத்திக்கோளாறு, பைத்தியம் என்ற குற்றங்களைச் சுமத்துவதாகும். info

• ضعف المشركين في كيدهم وعدائهم، فهم خاضعون لله مقهورون تحت أمره وسلطانه.
2.தமது சூழ்ச்சியிலும் எதிர்ப்பிலும் இணைவைப்பாளர்களின் பலவீனம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள், அவனது கட்டளைக்கும் அதிகாரத்திற்கும் கீழ் அடக்கப்பட்டுள்ளனர். info

• أدلة الربوبية من الخلق والإنشاء مقتضية لتوحيد الألوهية وترك ما سوى الله.
3. படைத்தல், உருவாக்குதல் ஆகிய தெய்வீகத் தன்மைக்கான ஆதாரங்கள், வணக்கத்தில் அல்லாஹ்வை மாத்திரமே ஏகத்துவப்படுத்தி அல்லாஹ்வைத் தவிரவுள்ளவர்களை விட்டுவிட வேண்டும் என்பதை வேண்டி நிற்பனவாகும். info